Header Ads



பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள சில அரசியல்வாதிகள் பொய்களை பரப்புகின்றனர் - டி.எம். ஜயரத்ன

பிரதமர் பதவி மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் பதவிகளை எதிர்பார்த்துள்ள சில அரசியல்வாதிகள் அவர்களின் நலனுக்காக பல பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் பதவி மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இறுதி தீர்மானத்தை எடுப்பார். கட்சியும் ஜனாதிபதியும் எடுக்கும் தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்வேன். அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தது.

அந்த தீர்மானத்தில் இதுவரை எந்த மாற்றங்களும் இல்லை. ஜனாதிபதியோ கட்சியில் உள்ள வேறு எந்த தலைவர்களோ இது பற்றி இதுவரை என்னிடம் பேசவில்லை. சில அரசியல் வாதிகள் என்ன கூறினாலும், ஊடகங்கள் எதனை எழுதினாலும் இறுதியாக இந்த விடயம் சம்பந்தமாக இறுதி முடிவு எடுப்பது ஜனாதிபதியின் கையில் தங்கியுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.