காத்தான்குடியில் பொலிஸ் முழந்தாளிட்ட விவகாரம் சுடுபிடிப்பு
காத்தான்குடி காவல்துறையினர் முழந்தாளிட செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் என் கே இலங்ககோன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு காவல்துறை விசேட விசாரணை பிரிவு அதிகாரிகள்
10-09-2013 மாலை காத்தான்குடி காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரட்ண தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பதில் காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனிடையே வெளியாகியுள்ள சில ஊடக அறிக்கைகளின் படி, சிரேஸ்ட அதிகாரி ஒருவரினால், காத்தான்குடி காவல்நிலைய உத்தியோகஸ்தர்கள் சிலர் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக முழந்தாளிடச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்நிலையத்தின் உத்தியோகஸ்தர் ஒருவர் 2 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றார் என்ற தெரிவிக்கப்பட்டு அதற்கு தண்டனையாகவே இவ்வாறு முழந்தாளிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment