Header Ads



முஸ்லீமகளின் பூர்வீகமான காணியை அபகரிக்க, பெரும்பான்மையினர் முயற்சி

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் மீனாக்கேணி என்ற பிரதேசம் பரம்பரை பரம்பரையாக முஸ்லீம்களால் ஆளப்பட்டும் அன்றாட ஜீவனோபாயத்துக்கான சிறு தோட்டங்களும் விவசாயங்களும் செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான வீடுகளுடனும் குடிசைகளுடனும் வீட்டுத்தோட்டங்களுடனும் வசித்து வருகின்றார்கள். இவ்வாறு அங்கு சுமார் 300 ஏழை குடும்பங்கள் வாழும் அப்பகுதியில் அண்மையில் புதிதாக பௌத்த விகாரை ஒன்று அமைக்கபட்டுள்ள அதே வேளை இவர்களின் பூர்வீக குடியிருப்பு காணிகள் நில அளவையாளர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதேச செயலாளருக்கு தெரியாமல் அளவையிடப்பட்டு ஏற்கெனவே போடப்பட்டிருந்த அளவைக்கற்களை புதிதாக வருகை தந்த நிலஅளவையாளர்களுடன் வருகை தந்த குழுக்கள் பிடுங்கி எறிந்துள்ளதாகவும் அங்கு தங்களது காணிகளுக்கூடாக பௌத்த விகாரைக்கான வீதியும் பெறப்பட்ட அதே வேளை தொல் பொருள் மற்றும் விகாரை என்பனவற்றுக்கான காணி 475 ஏக்கர் கையகப்பபடுத்தப்படவுள்ளதாகவும்  அண்மையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட சென்ற கி.மா.ச.உறுப்பினர் அன்வர் அவர்களிடம் மக்கள் அங்களாய்த்துள்ளனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இப்பிரதேச காணிகள் கடந்ந நான்கு மாதங்களுக்கு முன்னர் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்  அவற்றுக்கான நில அளவையும் எல்லைக்கல்லிடுதலும் தற்போது இடம்பெறுகின்றது என நிலஅளவையாளர்கள் தங்களிடம் கூறியே கற்கள் இட்டனர்  அத்துடன் காணிக்கச்சேரி நடாத்தி அதற்கு விண்ணப்பித்து அதற்கான பிரதியும் தாங்கள் வைத்திருப்பதாகவும் இது வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்வில்லை எனவும் தெரிவித்த அதே வேளை மீண்டும் கற்களை பிடுங்கும் போது ஏன் பிடுங்குகின்றீர்கள் என்று நில அளவைக் குழுக்களிடம் நாங்கள் வினவியபோது தங்களுக்கு உயர்மட்ட அழுந்தங்களின் மூலம் நாங்கள் செயற்படுகின்றோம் என பதிலளித்தார்கள் என்று மக்கள் மனஅழுத்தத்துடன் தெரிவித்தனர்.

இது விடயமாக மா.ச.உ. அன்வர் மக்களிடம் கூறுகையில் நான் தொடர்ந்து திகோணமலை மாவட்ட காணி விடயமாக பேசி வருகின்றேன் புல்மோட்டை தொடக்கம் சேருவாவிலை போன்ற பிரதேசங்கள் வரையான பகுதிகளில் பல ஏக்கர் காணிகள் பூஜாபூமி, தொல்பெருள் என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கும் நோக்குடன் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இவற்றை காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக புல்மோட்டை விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கான தீர்வு மிக விரைவில் மக்களுக்கு சென்றடையும் என்று தான் நம்புவதாகவும் கூறிய அதே வேளை இப்பிரச்சினைக்கான முக்கிய காரணம் முஸலீம்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையின் பலவீனமுமே என்றும் தெரிவித்தார்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக உயர்மட்டங்களுக்கு நான் தெரிவித்திருக்கும் அதே வேளை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவிருக்கும் கி.மாகாண சபை அமர்வின் போது இதைப்பற்றி பேசவுள்ளதாகவும் ஏற்கெனவே கி.மாகாண முதலமைச்சரிடம் இது விடயமாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.