Header Ads



தேர்தல்கள் தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல் காலங்களில் பிரச்சினைகள், அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஒழுக்கவிழுமியங்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

ஓவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் வாக்குரிமையுண்டு. எனவே தத்தமது வாக்குரிமையை வீணாக்காமல் உரிய முறையில் பயன்படுத்துமாறும் அமைதியான முறையில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சுதந்திரமாக வாக்களித்துவிட்டு அவ்விடங்களில் தரித்து நேரத்தை வீணாக்காது திரும்பிவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 

தேர்தல் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடிகளுக்கு அண்மித்த இடங்களில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருப்பதையும் வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதையும் பொய் வதந்திகளை பரப்புவதையும் மற்;றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதையும் தவிர்ந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை கேட்டுக்கொள்கின்றது.

அஷ்ஷைய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா   

9 comments:

  1. These things are not relevant to ACJU. Good thing, they did not suggest to vote a particular party.

    ReplyDelete
    Replies
    1. So what? What is your prblm my brother.ACJU is our guid.they have all the rights regarding sl muslims.

      Delete
  2. Doing mistakes in mostly wanted things and advising in unwanted things, very cheap

    ReplyDelete
  3. வாக்களித்தல் என்பது , சாட்சி கூறுதலாகும். அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் தத்தமது சொந்த வாக்குகளைத் தவிர கள்ள வாக்களிப்பில் ஈடுபடக்கூடாது. அது ஹறாமாகும் என்றும் உபதேசம் செய்திருக்கலாம்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. nizar

    are you have any problem in your head.

    ReplyDelete
  5. Renees, change as "Do you " instead of "are you"

    ReplyDelete
  6. முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்திர்க்காக வாக்களிக்கச் சொல்லுங்கோ .

    ReplyDelete
  7. Dear Muslim Brothers and sisters,
    If anybody or any group did good things should be appreciated. do not point their mistake or wrongs. otherwise there is no chance to do good thing even Mr. Nisar him self. No one is malaayika to not to do mistaken. SHOULD CORRECT HIM SELF BY SEEING THE FAULT OF OTHERS NO ONE CAN NOT COMMIT ALL THE WRONG IN THE WORLD.

    ReplyDelete
  8. பிறை பார்த்த கதையாகிவிடுமோ.. .இந்த ACJU உபதேசம்.. இன்றைய காலகட்டம்.. நன்று சிந்தித்து செயல்படவேண்டும்..... அதை மக்களே நீங்களே சிந்தித்து முடிவு செய்தல் என்பது புத்திசாலித்தனமாகும்....

    நம்பிக்கைகுறிய எமது தலைவர்கள் சுயநலத்துக்காக 'ஜால்ரா' அடிக்கும்போது நமக்கு நாமே ஏன் மண்னை வாரிப்போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லத்தோன்றுகிறது.....

    ReplyDelete

Powered by Blogger.