இனரீதியான பாகுபாடும், அடிப்படை உரிமையும்
(அப்துல் அஸீஸ்)
மனித உரிமைகள் யாவும் ஒன்றிற்கொன்று நெருக்கமானவை. ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்கி;ன்றது. அதே போல் ஓர் உரிமையை மறுப்பது, பிற உரிமைகளையும் எதிர் மறையாக பாதிக்கின்றது. எவருக்கும் எங்கேயும் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.
இன்று சமய வேற்றுமை என்பது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் சமூக மோதல்களுக்கான அடிப்படையாக இருந்து வருகின்றது. இதனால் அரசுகள் பல்வேறு சமயங்களடங்கிய சமுகத்தில், சமயங்களைப் பற்றி இம்சிப்பவர்களுக்கும், அதிகாரங்களைப் பயன்படுத்தி சமயக் கடமைகளைத் தடுப்பவர்களுக்கும் எதிராக, பொறுப்புடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இன முரண்பாடுகளையும், இம்சித்தலையும் இல்லாதொழிக்க முடியும்.
உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் சமயங்களை காக்கின்றோம் என்ற மதப்பற்றுக் காரணமாகவும், மத அடிப்படையிலான இயக்கங்களின் செயற்பாடுகள் காரணமாகவும், நாளுக்கு நாள் வௌ;வேறு வடிவங்களில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து பல சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இது சிறுபான்மையினரின் இருப்பிற்கான அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வருவதுடன் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றதொன்றாகவும் இருக்கிறது.
இலங்கையில் தற்போது தலைவிரித்துத் தாண்டபமாடும் இன ரீதியான அடக்குமுறைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய சிறுபான்மையினரின் பிரச்சினைகளை கருவோடு உருவழிக்க வேண்டும். இதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் எந்த அளவிற்கு சர்வதேச சட்ட நியமனங்களுக்கமைவாக உள்ளது என்பதை இங்கு ஆராய்வோம்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் இரண்டாம் அத்தியாயம் பௌத்த மதம் பற்றி கூறுகிறது. பௌத்த மதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்பட வேண்டுமென்பதோடு, அதற்கிணங்க, அடிப்படை உரிமையின் 10ஆம், 14(1)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டு;ள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதே வேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டு;ள்ளது.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுக்குள்ள உரிமை போன்று சமனாக ஏனைய சமயங்களுக்கும் உரிமை வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியையும்;, சந்தேகத்தையும் இன்று தோற்றுவித்துள்ளது. இந்த விடயமானது அரசியல் அமைப்பில் உள்ள அத்தியாயங்கள்; சமத்துவம் என்ற விடயத்தையும், மதச் சார்பற்ற அரசியல் அமைப்பு எனவும் நாம் இலகுவாகக் கருத முடியாதுள்ளது. அத்துடன் ஏனைய மதங்களுக்கு சமத்துவ அந்தஸ்து உள்ளது என்ற எண்ணக்கருவை இம்மாதிரியான ஒரு ஏற்பாட்டின் மூலம் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. இதனால் பெரும்பான்மை சமுகத்தினரது கருத்துக்கள் மேலோங்கி நிற்பதையும் அதற்கான விசேட அந்தஸ்து வழங்கப்படுவதற்கான அங்கீகாரத்தையும் அரசியல் அமைப்பு சட்டரீதியாக எடுத்துரைக்கிறது.
ஆனால் 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின் மூன்றாவது அத்தியாயாயத்தில் உள்ள அடிப்படை உரிமையில், தனி மனிதன் ஒருவனுக்கு தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் அடிப்படை உரிமையும,; சுதந்திரமும் உள்ளதென்பது சந்தேகமின்றி அதன் உறுப்புரைகள் மூலம் பாதுகாக்கப்;படுகிறது. இதனால் பௌத்த மதத்தை பாதுகாக்கும் அரசின் கடமை இருக்கின்ற வேளை, அக்கடமையினை செய்யும் போது, ஏனைய சமயங்கள் மீது அத்துமீறல்கள், தலையீடுகள், மட்டு;ப்பாடுகள் செய்யக் கூடாது என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இதனையே அடிப்படை உரிமைச் சட்டங்கள்; பாதுகாக்கின்றன.
அரசானது சகல சமயங்களுக்கும் ஒரே மாதிரியான கௌரவம் கொடு;க்கப்பட வேண்டும். 'புத்த சாசனத்தை பாதுகாப்பது அரசின் மேல் சுமத்தப்பட்டு;ள்ள சிறப்புக் கடமை' இதில் அரசுகள் முன்முரமாக செயற்பட்டாலும் ஏனைய சமயங்களின் உரிமைகள், கலாசாரங்கள், நம்பி;க்கைகள் பாதிக்கப்படாமலிருப்பது அவசியமாகும்.
இன்று அரசியல் பிரமுகர்கள், அதிகார மட்டங்கள் மற்றும் இனவிரிசல்களை ஏற்படுத்துவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட குழுக்கள் சிறுபான்மையினர்களின் கலாசார விழுமியங்களையும், உரிமைகளையும் தான்தோன்றித்தனமாக விமர்சித்தும், களத்தில் இறங்கி தடு;த்தும் ஏனைய சமயங்களை ஓரங்காட்டச் செய்யவும் முற்படுகின்றனர். இவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் கொண்டு வந்து சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது இறைமை உள்ள அரசின் முக்கிய பணி என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியாது.
இக் கடற்பாடானது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1965 டிசம்பர் 21ம் தேதிய தீர்மானமானத்தின் அடிப்படையில், எல்லா வகையான இனஞ்சார் ஓரங்காட்டுதலை நீக்கிவிடுவதன் மீதான சர்வதேச சமவாயத்தை கொண்டு வந்து அதில் இலங்கை அரசு கையொப்பமிட வைத்ததேயாகும்.
எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், மதிப்பிலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறந்துள்ளனர் என்றும், ஏதேனும் வகையினதான வேறுபாடின்றி குறிப்பாக, இனம். நிறம் அல்லது பிறப்பிடம் காரணமாக எல்லா உரிமைகளும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவர்கள் என்றும், சட்டத்திற்கு முன் சமமாகவுள்ளாரென்பதையும் ஏதேனும் ஓரங்காட்டுதலுக்கெதிராக ஏதேனும் தூண்டுதலுக்கெதிராக சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்பதை சர்வதேச சமவாயம் எடுத்துரைக்கிறது.
அத்துடன் இனஞ்சார், மதஞ்சார் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஆட்களின் உரிமைகள் சம்பந்தமாக குடியியல், மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தில் 27ம் உறுப்புரையின் ஏற்பாடுகளை கருத்திற்கொண்டும், இவர்களின் உரிமைகளை மேம்படுத்துதலும், பாதுகாத்தலும் அவர்கள் வாழுகின்ற அரசுகள் தங்களின் அரசியல் நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு அவசியம் என்பதை மனதிற் கொண்டு சகல செயற்பாடுகளையும் கொண்டு செல்லல் வேண்டும்.
இலங்கையில் தாங்கொண்ணாத் துயரத்தையும், அச்சமான சூழலையும் ஏற்படுத்திய பயங்கரவாதம் தற்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. இந்த நிம்மதியோடு எமது மக்கள் இருக்கின்றனர். இவ்வேளையில், அதை விட படு மோசமான சமயங்களை இம்சைப்படுத்துகின்ற, இனரீதியாக ஓரங்காட்டுகின்ற விடயம் எமது நாட்டில் தலைதூக்கியுள்ளது கவலைக்குரியது.
இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும், ஏதேனும் சட்டமுறையான தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்குமான சுதந்திரம் அடிப்படை உரிமையின் உறுப்புரை 14 லில் இருககின்றது. இதனை மட்டுப்படுத்தும் வகையில் தொழிற் செய்யும் உரிமையை மீறும் வகையில் ஒரு சமுகத்தைச் சார்ந்தவர்களுக்கு கடைகள் கொடு;க்க வேண்டாம் எனவும், அவர்களது கடைகளில் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும், மக்களைத் தூண்டியும், கவனஈர்ப்புப் பேரணிகளைச் செய்தும் குரோதங்களை வளர்த்து வருகின்றனர். இதே வேளை நீண்ட வரலாற்றைக் கொண்ட வணக்கஸ்தளங்களையும், வியாபார ஸ்தாபனங்களையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்ற பிரபல்யமானவர்கள் பாரபட்சமின்றி சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆடிப்படை உரிமையின் 14வது உறுப்புரையின்படி கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் அனைவர்களுக்கும் இருக்கின்றது. இருப்பினும் ஒரு சமயத்தைப் பின் பற்றுபவர்கள் அச்சமயத்திற்குள் பல்வேறு கருத்துக்களைக் கொண்ருக்கலாம். அதனை எவ்வழிகளிலும் வெளிப்படுத்தலாம். அதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறித்த சமயத்தைச் சாராதவர்கள் அல்லது அச் சமயம் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிராதவர்கள் மற்றுமொரு சமயம் பற்றி விமர்சித்து இழிவுபடுத்தும் விதத்தில் நடந்துகொள்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது அச்சமயத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை புண்படுத்தும்.
இன்று சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் எது செய்தாலும் அது தவறான கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டு அது பற்றிய தவறான வியாக்கியானங்கள் சமுகத்திற்கு மத்தியில் பரப்பி விடப்படுகிறது. இதனால் இனரீதியான பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை, சகோதரத்துவம் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புண்டு
எது எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் நிருவாக நிறைவேற்றுத் துறையினைச் சேர்ந்தவர்கள் சமய ரீதியான உரிமைகளுக்கு இடைஞ்சல் அல்லது மட்டுப்பாடுகள் போடுகின்ற போது, உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு நிவாரணமும், நஸ்டஈடும் பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் எமது நாட்டின் அடிப்படை உரிமை சட்டத்தில் உள்ளது என்பதை அனைவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதரிடையே அல்லது ஒரு சமூகத்தினரிடையே கருத்தியல் ரீதியான மோதல்கள்; ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை முடிவுக்கு கொண்டு வரக்கூடியவையாகவிருந்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இன்னுமோர் வகையில் கூறுவதானால் சமாதான செயன்முறையின் பரிமாணங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும்.

Post a Comment