முஸ்லிம்களுக்கு பௌத்தர்கள் இழைத்த அநீதிகளை சமர்ப்பியுங்கள் - கும்புருகமுவ தேரர்
(அஷ்ரப் ஏ சமத்)
அண்மைக் காலங்களில் இலங்கையில் முஸ்லீம்களது மத விவகாரம் மற்றும் பள்ளிவாசல்களுக்கு பௌத்த மதத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதரங்களுடன் தெரிவித்து எண்ணிடம் சமர்ப்பியுங்கள். அடுத்த மாதம் ஐனாதிபதியின் செயலாளார் வீரதுங்கவை சந்தித்து இவ் விடயம்பற்றி கலந்துரையாட உள்ளேன். என சப்ரகமுகவ பல்கலைக்கழக வேநதர் பேராசிரியர் கும்புருகமுவ தேரர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க அறிவுறுத்தல் சம்பந்தமான மாதாந்தக் கூட்டம் இணைத் தலைவர்களான முன்னாள் சபாநாயகர் எம். எச். முஹம்மத் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் கும்புருகமுவ தேரர் தலைமைகளில் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்த்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. ஐனாதிபதியின் செயலாளரின் அறிக்கை சமர்ப்பிக்கவென ஆதாராபூர்வமான அறிக்கை தயாரிப்பதற்கு உப குழுவென்று நியமிக்கப்பட்டது.
உலக முஸ்லீம் லீக்கீன் வாராந்த பத்திரிகையில் இலங்கை பௌத்தர்கள் முஸ்லீம்களை தாக்குவது சம்பந்தமான கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் அதற்காக எம்.எச்.முஹம்மது அறிக்கையொன்றை அனுப்புமாறு குழு வேண்டிக் கொண்டது.
ஜனாதிபதியின் பௌத்த விவகார இணைப்புச் செயலாளர் கூறுகையில்,
பொதுபலசேன அமைப்பு நோர்வேயிடம் பெற்ற நிதி உதவிக்காக அவர்களது நிகழ்ச்சி நிரல் முஸ்லீம்களை சாடுவது இதனை அவர்கள் நாளாந்தம் செய்தால் தான் அவர்களுக்கு நிதி தொடர்ந்து கிடைத்து வரும் என கூறினார்.
இக் கூட்டத்தில் ஜனாதிபதியின் பௌத்தவிவகார இணைப்புச் செயலாளர் தம்மரன்ஜித் தேரர், மற்றும் பாணகல உபதிஸ்ச தேரர், ஹசைன் மொஹமட், ஐனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ், பேராசிரியர் புர்ஹான், சாஹூல் ஹமீட் மொஹமட், ஜே.சீலா விக்கிரமரத்தின, ஹிஜிலான், மொலவி தாசீம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஜனாதிபதியின் பௌத்தவிவகார இணைப்புச் செயலாளர் தம்மரன்ஜித் தேரர், மற்றும் பாணகல உபதிஸ்ச தேரர், ஹசைன் மொஹமட், ஐனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ், பேராசிரியர் புர்ஹான், சாஹூல் ஹமீட் மொஹமட், ஜே.சீலா விக்கிரமரத்தின, ஹிஜிலான், மொலவி தாசீம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment