Header Ads



தமிழ்த் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக  இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் கபில கமகே தெரிவித்துள்ளார்.

 தேர்தல் போட்டியிட்டு தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக கூறி உறுதி எடுத்துக்கொள்வது கட்டாயம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் சுயநிர்ணய உரிமை குறித்து தெரிவித்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தவிர வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக சில யோசனைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையின் அடிப்படையில் அந்த கட்சி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்றால்  மக்கள் ஆணையை காட்டி சுயாட்சி நிர்வாகத்தை நோக்கி செல்ல சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள கூடும் எனவும் கபில கமகே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். gtn

1 comment:

  1. த.தே.கூ. நிலைப்பாடு சரியா? பிழையா? என்பது அப்புறம் பார்போம், ஒன்று மட்டும் நிச்சயம், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அடிக்கடி மண்டையில் குட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை. இதுவும் அவர்களுக்கு போடும் மூக்கணாங்கயிறு

    ReplyDelete

Powered by Blogger.