Header Ads



ஜனாதிபதி வருகை தந்து சிறப்பித்தது அவரது ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது - ஹக்கீம்

(Dr hafeez)

 ஒலுவில் துறைமுகம் ஞாயிற்றுக் கிழமை (01) பிற்பகல் 03.15 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் மகத்தான பங்களிப்பை நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்தார். அத்துடன் இது மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகமாக சிறந்து விளங்கும் என்று குறிப்பிட்டதோடு, இத்துறைமுக நிர்மாணத்தினால் தமது காணிகளை இழந்த மக்களுக்கும், மீன்பிடித் தொழிலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்கு துறைமுக பெருந்தெருக்கள் அமைச்சரும் துறைமுக அதிகார சபைத் தலைவரும் சனிக்கிழமை (31) ஒலுவிலில் தமது ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடலில் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி, மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்னரும், இன்று ஒலுவில் துறைமுகத்ததுக்கும் நேரில் வருகை தந்து சிறப்பித்தது இவற்றில் அவரது அரிய ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார். 

காணிகளையும் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் ஒலுவில் மற்றும் அதனைச்சூழ உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு இவ்வரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி அவர்களுக்கான உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக தமது சூறாவளி தேர்தல் பிரசார வேலைகளை இடை நிறுத்திவிட்டு இரண்டு நாட்களாக தென் கிழக்கில் தங்கியிருந்து  நடவடிக்கை மேற்கொண்டமைக்காக அமைச்சர் ஹக்கீம் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திரும்பும் வழியில் மக்கள் திரளாகக் குழுமி நின்று நன்றி தெரிவித்தனர்.


4 comments:

  1. யா அல்லாஹ் எங்கள் தலைவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாயாக .......

    ReplyDelete
  2. Ivarhal Pattum terndamttarhal eppadi slvakku iruntal innum (50) masjedduhal udyttalum onrum vay trackage mattarhal

    ReplyDelete
  3. all drama i don't know how this oluvil people accept Rauf hakeem may be they don't know out side oluvil what happening any one who say rauf hakeem done good things for Muslims community in any where in srilankaif they proof i will stop writing comments.

    ReplyDelete
  4. BR.Almurshith you pray god for the long life of rauf no problem pls dont pray for being leader long time because u dont know about Rauf hakkeem he is the big cheater in srilanka now.

    ReplyDelete

Powered by Blogger.