Header Ads



மாணவர்களிடமிருந்து வசதிக் கட்டணங்கள் தவிர வேறு கட்டணங்களை அறவிடக்கூடாது

இம்முறை முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பெற்றோரிடமிருந்து வசதிக் கட்டணங்கள் தவிர்ந்த வேறு கட்டணங்களை அறவிடக்கூடாது என மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக, அதிபர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஜி.என். அய்லப்பெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலை அபிவிருத்திக் கட்டணம் என்ற அடிப்படையில் அதிபர்களால் பெற்றோரிடமிருந்து நிதி அறவிடப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரிட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் கூறினார்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜி.என். அய்லப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சும்மா போங்க சார்... ரொம்ப ளொள்ளாப் போச்சு.. நீங்களும் உங்க சுற்றறிக்கைகளும்..!

    நீங்க எப்படித்தான் சுற்றறிக்கைகளைச் சுற்றிச் சுற்றி அனுப்பினாலும் பாடசாலைக்குச் சேரும் மாணவர்களின் பெற்றோரிடம் அதி நவீன முறைகளையெல்லாம் கையாண்டு கலெக்ஷன் பண்ணும் திட்டங்கள் ஆயிரம் இருக்கு அவர்களிடம்..! உங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது!

    பாடசாலை நிர்வாகங்கள் வாங்க மறுத்தாலும் எப்படியாவது என் பிள்ளைக்கு சீட் கிடைக்கணும் என்கிறதுக்காக கேக்குறதை விடவும் சந்தோஷமாக் கொடுக்கிற இலட்சம் பெற்றோர் நம்ம ஸ்ரீலங்காவில இருக்காங்க சார்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.