நாட்டில் பள்ளிவாசல் உடைக்கப்படும்போது எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்..?
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை இதுவரைக்கும் பெற்றுக்கொடுக்க முடியாதவர், அக்கரைப்பற்று விவசாயிகளின் வட்டமடுக்கண்ட விவசாய நிலங்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர், ஒலுவில் பிரதேச ஆலிம் சேனைப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர், அம்பாரை மாவட்டத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டால் ஓடிவந்து தடுத்து விடுவேன் எனக் கூறியுள்ளதுதான். கேட்பவன் கேணயனாக இருந்தால் எருமையும் ஏரோ பிளேன் ஓட்டப்போரன் எனுமாமம் என்பதைப் போல மக்கள் முட்டாள்களாக இருந்தால் அதாஉல்லா இதுவும் பேசுவார் இன்னமும் பேசுவார் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் அவரது நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் நிர்மாண வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அக்கரைப்பற்றில் அண்மையில் உரையாற்றிய அதாஉல்லா, அம்பாரை மாவட்டத்தில் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டால் மட்டுமே நான் பேசுவேன், வேறு இடங்களைப்பற்றி எனக்கு கவலையில்லை, நான் ஊரார் சோற்றில் மாங்காய் போட்டு பிசைய மாட்டேன், அதனைப்பற்றிக் கவலையுமில்லை எனக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியிருப்பது வீடு தீப்பிடித்தாலும் என் ஆடையில் தாவும் வரை எனக்குக் கவலையில்லை என்பதைப்போல் உள்ளது. அவரைப் பொறுத்தவரை பள்ளிவாயல் உடைப்புக்களைப்பற்றிப் பேசி தனது ராஜ விசுவாசத்தில் குறை ஏற்பட்டுவிடும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதையே இக் கருத்து மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
யார் என்ன கூறினாலும், தனது பதவியையும் அப் பதவியூடாக வரும் சுகபோகங்களையும் பாதுகாப்பதற்கு எதையும் இழக்க அவர் தயாராக இருப்பவர். அபிவிருத்தி எனக்கூறிக்கொண்டு அக்கரைப்பற்றில் அவர் செய்யும் கொந்தராத்துக்களைக் காட்டி, பள்ளி உடைப்புக்கள், பர்தா பற்றிய விடயங்கள், முஸ்லிம்களின் பொருளாதார நிலைகள் மீதான தாக்குதல்களைப் பற்றிப் பேசினால் இவற்றிற்கான நிதிகள் நின்றுவிடும் எனக் கூறுகிறார். தாயை அடகு வைத்து தமக்கைகளுக்கு திருமணம் செய்வது போல் சமூகம் அழிந்தாலும் கொந்தராத்துக்கள் தொடரவேண்டும் என்பதில் அதாஉல்லா கவனமாக இருக்கிறார்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், பல ஆண்டுகால பிரச்சினைகளான, தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை இதுவரைக்கும் பெற்றுக்கொடுக்க முடியாதவர், அக்கரைப்பற்று விவசாயிகளின் வட்டமடுக்கண்ட விவசாய நிலங்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர், ஒலுவில் பிரதேச ஆலிம் சேனைப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர், அம்பாரை மாவட்டத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டால் ஓடிவந்து தடுத்து விடுவேன் எனக் கூறியுள்ளதுதான். கேட்பவன் கேணயனாக இருந்தால் எருமையும் ஏரோ பிளேன் ஓட்டப்போரன் எனுமாமம் என்பதைப் போல மக்கள் முட்டாள்களாக இருந்தால் அதாஉல்லா இதுவும் பேசுவார் இன்னமும் பேசுவார். அதுமாத்திரமல்ல அக்கரைப்பற்றிலும் பள்ளிவாயல்கள் அதிகரித்துவிட்டதாம், எனவே சில பள்ளி வாயல்களில் அதான் சொல்வதை நிறுத்தி மூடிவிடவேண்டும் எனவும் பேதலித்துப் பேசியுள்ளார் அக்கரைப்பற்று மக்கள் அவர் எப்போது பொது பல சேனா போன்ற பெரும்பான்மைக் கடும்போக்கு வாதிகளோடு சேர்ந்தார் என வியுப்புடன் வினவுகின்றார்கள். ஒரு வேளை கொந்தராத்துக்களுக்காக மதம் மாறி விட்டாரே எனவும் கேட்கின்றனர். அப்படிக் கேட்டவர்களிடம், அவர் எப்போது முஸ்லிமாக இருந்தார் என நான் கேட்டேன். ஏன் எனில் முஸ்லிம்கள் உலகத்தின் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யப்பட்டாலும் அவர்களுக்காக ஆகக் குறைந்தது பிரார்த்தனையாவது செய்வார்கள். ஆனால் அதாஉல்லா தன் சொந்த நாட்டில் பள்ளிவாயல் உடைக்கப்படும்போது அவர் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்.
முஸ்லிமாக இருந்தால் உலகத்திலுள்ள எல்லா முஸ்லிம்களையும் ஒரே பார்வையில் அதாஉல்லா பார்த்திருப்பார். முஸ்லிம்களுக்கு எல்லைகளற்ற ஒரே சமூகம் என்ற பார்வையே இஸ்லாம் பரிந்துரைக்கிறது. மாறாக, ஊர் என்று மாகாணம் என்று நாடு என்று பிர்த்துப்பார்க்க முடியாது. ஆனால், அவர் எப்போதுமே பிரதேசவாத்திலும் பிராந்திய வாதத்திலும் ஊறித்திழைத்தவர்தான். ஆகவே தான், இவ்வாறு அவர் பேசுகிறார். இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவாக அடையாளம் காணவேண்டும். இப்படிப்பட்டவர்களை முஸ்லிம் அரசியல் பரப்பிலிருந்து தூக்கிவீசத் தயாராக வேண்டும். அப்போதுதான் காட்டிக் கொடுப்புக்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும் எனவும் கூறினார்.

சரியான கருத்து
ReplyDeleteIntraiku arasiyalwathihal waimoodi iruppathanalthan muslimkaluku ivvalawu pirachani.h eppathal ivarhal vilipparhalo
ReplyDeleteஆஹா நிறைய தன் முன்னாள் தலைவரைப்பற்றி பேசுகின்றார்.
ReplyDeleteஇதே பேச்சை மேயர் பதவி கிட்டியிருந்தால் பேசுவாரா.....
அடுத்த ஏச்சு ஹக்கீமுக்குத்தான்....
அதுசரி ஏன் இந்த வாய் முஸ்லீம்களுக்கு அநீதி செய்யும் நாட்டின் அரசுக்கு ௭திராக திறக்க முடியாமல் இருக்கிறது.திவநெகும தாரைவார்ப்பில் நக்குண்டதால் நாவிழந்தமையினாலோ.....
கள்வர் கூட்டம் கவனம்
ReplyDelete
ReplyDeleteParamasivan kaluththil irunthu paampu keaddathu karuda sawqiamah????