எய்ட்ஸ் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ரஷ்ய அழகி எரித்து கொலை
ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் அவரது சடலம் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அழகியின் காதல் கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37), போட்டோ கிராபர்.
இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி யூலியா திடீரென காணாமல் போனார். பிரபலமான மாடல் அழகி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அவரது தம்பி மைக்கேல், யூலியாவை தீவிரமாக தேடி வந்தார். இதை தொடர்ந்து அடர்ந்த காடுகள் நிறைந்த யூரல் மலை பகுதியில் யூலியாவின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் யூலியாவின் கழுத்து திருகப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், யூலியா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கணவர் திமித்ரியை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், யூலியா மூலம் திமித்ரிக்கு எய்ட்ஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமித்ரி, யூலியாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், அடிப்படை காரணம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். நான் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமித்ரி தெரிவித்துள்ளார். மாடல் அழகி யூலியாவை மர்ம நபர்கள் யாராவது கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மாடல் அழகி கொல்லப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment