காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமையாற்றி வருகின்ற பெரும்பாளான ஊழியர்கள் இன்று 11-09-2013 புதன்கிழமை காலை தொடக்கம் காத்தான்குடி பஸ் டிப்போவின் கதவை மூடி வேலைநிறுத்த போராட்டத்தில்; ஈடுபட்டனர்.
இவ் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அங்கு வேலை நிறுத்த போரட்டத்தில் கலந்து கொண்ட பஸ் டிப்போ ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி எங்களுடைய பஸ் டிப்போ ஊழியர்கள் கடந்த புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் அன்றைய தினம் அங்கு விஜயம் செய்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் நசீர் தலைமையில் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களுடான சந்திப்பொன்று இடம்பெற்று இச்சந்திப்பின்போது காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பளத்தில் 2 மாதச் சம்பளத்தை இம்மாதம் 10ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கழமை வழங்குவதென உறுதியளிக்கப்பட்டு ஒரு தினங்கள் கடந்தும் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பள நிலுவை வழங்கப்படாததால் 11 திகதி இன்றைய தினம் எங்களுடைய ஊழியர்கள் காத்தான்குடி பஸ் டிப்போவின் கதவை மூடி வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் இதற்கு உடணடியாக சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் தீர்வை பெற்றுத்தர வேண்டுமென அவ் ஊழியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இதனால் தினமும் காத்தான்குடி பஸ் டிப்போவில் இருந்து காத்தான்குடி –கொழும்பு- ,கல்முனை திருகோணாமலை, -மட்டக்களப்பு -கல்முனை,பாலமுனை மட்-போதனா வைத்தியசாலை,மண்முனை –மட்டக்களப்பு உட்பட அனைத்து பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வேலைநிறுத்த போராட்டத்தில்; ஈடுபட்டுள்ள காத்தான்குடி பஸ் டிப்போத ஊழியர்கள் மூன்று மாத கால சம்பள நிலுவையை வழங்கும் வரை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடரும்,பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஊழியர்களை ஏமாற்றாதே என பல்வேறு சுலோகங்களை வைத்து இவ் வேலைநிறுத்த போராட்டத்தில்; ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு இராணுவத்தினரும்,பொலிசாரும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment