Header Ads



முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக தமிழர் மறுமலர்ச்சி இயக்கம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம்

வடமாகாண சபை தேர்தலில் அரசாங்க தரப்பில் போட்டியிட்ட எம் சிராஸ் என்பவருக்கு எதிராக தமிழர் மறுமலர்ச்சி இயக்கம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று தற்போது யாழ் மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளது.

இத்துண்டுப்பிரசுரத்தில் சிராஸூக்கு ஒர் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும்,வட மாகாண மக்களின் கலாசார வாழ்வை  அவமானப்படுத்தும் விதமாக அவர் செயற்படுவதை வன்மையாக  எதிர்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த போரில் மட்டுமே நாம் தோற்றோம்.உணர்வு ரீதியாக நாம் தோற்கவில்லை. நாங்கள்  இன்னும் எமது உணர்வுகளை தொலைத்து விடவில்லை.

அனைத்தையும் இழந்து நிற்கும் நாம் உங்களைப்  போன்றவர் இங்க வந்து எம் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதியோம்.உரிமை போராட்டத்தில் நாம் அனைத்தையும் இழந்தாலும் அபிலாசைகளை இழக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.