Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கவலை தருகின்றது!

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் குறி்த்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக  தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.  இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணாக அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சில அமைப்புக்கள் தயாராகிவருகின்றன.

புலிகள் அன்று முன்வைத்த கோரிக்கைகளை இன்று புலிகள் இல்லாத நிலையில் அமுல்படுத்த சில சக்திகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எதுவித ஆதராமுமற்றது என்றும் அமைச்சர் கூறினார். 




1 comment:

  1. இல்லை. எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.