Header Ads



கிழக்கின் ஒரு பகுதி முஸ்­லிம்­களின் தாயகம் என்று கூறப்­படும் அபாயம் உள்­ளது

நாட்டில் பயங்­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இன­வாத ரீதி­யான கொள்கை பிர­க­டனம் ஒன்­றையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்­ளது. 1977 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தனி ஈழ பிர­க­டனம்மற்றும் 1985 ஆம் ஆண்டு நடை­பெற்ற திம்பு பேச்­சு­வார்த்­தையில் முன்­வைக்­கப்­பட்ட தீர்வு யோச­னை­களை ஒட்­டி­ய­தாக கூட்­ட­மைப்பின் கொள்கைப் பிர­க­டனம் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே கார­ண­மா­க­வுள்­ளன என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் தாயக பூமி என்று ஏற்­றுக்­கொள்­வதே தனி­நாட்­டுக்­கான ஒரு படி­யாக அமைந்­து­விடும் விட­ய­மாகும். அப்­ப­டி­யாயின் மலை­யகம் இந்­திய வம்­சா­வளி மக்­களின் தாயகம் என்றும் கிழக்கின் ஒரு பகுதி முஸ்­லிம்­களின் தாயகம் என்றும் ஏனைய மாகா­ணங்கள் சிங்­கள மக்­களின் தாயகம் என்றும் கூறப்­படும் அபாயம் உள்­ளது. எனவே கூட்­ட­மைப்பின் இந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நிரா­க­ரிக்­கின்றோம் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீவிர இன­வாத ரீதியில் தனது பழைய நிலைப்­பாட்­டி­லி­ருந்து சற்றும் வில­காமல் இந்த கொள்கை பிர­க­ட­னத்தை முன்­வைத்­துள்­ளது. வடக்குத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்­றி­யீட்­டி­னாலும் தோல்­வி­ய­டைந்­தாலும் அவர்­களின் இன­வாத போக்கு தொடரும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது என்றும் மக்கள் விடு­தலை முன்­னணி குறிப்­பிட்­டுள்­ளது.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுத் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க இந்த விட­யங்­களை கூறினார். vi

1 comment:

  1. இதற்கு யார் காரணம் BBS, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பௌத்த இனவாத கட்சிகளும், இயக்கங்களும் தான். எப்போ பார் இது சிங்களவர்களுடைய நாடு மற்றவர்கள் எல்லோரும் வந்தேறுகுடிகள் என்று கூறிக், கூறி சிறு பான்மை மக்களை ஒடுக்கும் நிலைமை இன்னும் மாறவில்லை,நீங்கள் தான் இந்த நிலைமையை ஏற்படுத்தியவர்கள்

    ReplyDelete

Powered by Blogger.