கென்யா வணிக வளாக தாக்குதல் - வெள்ளைக்கார பெண் தேடப்படுகிறார்
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அல்– ஷபாப் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் 130 பேர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதல் இங்கிலாந்தை சேர்ந்த வெள்ளைக்கார பெண் சமந்தா லெவ்த் வெயிட் (29) என்பவர் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது.
எனவே, தலைமறைவாக இருக்கும் இவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை (இண்டர்போல்) கென்யா அரசு நாடியுள்ளது. அதைத் தொடர்ந்து இண்டர்போல் நிறுவனம் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அதில் சமந்தாவை பிடிக்க தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதவை பெண்ணான சமந்தா இங்கிலாந்து முன்னாள் ராணுவ வீரரின் மகள் ஆவார்.
இவரது கணவர் பெயர் ஜெர்மைன் லிண்ட்சே. கடந்த 2005–ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர். அதில் ஜெர்மைன் லிண்ட்சே சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment