Header Ads



சூறாவளி புயலை கண்டறிய ஆளில்லா விமானங்கள்

அமெரிக்காவில் சூறாவளி புயலை கண்டறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் சூறாவளி மற்றும் புயல் தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால் பலத்த சேதம் ஏற்படுகிறது. மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் சூறாவளி புயலை கண்டுபிடித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக 2 ராயவ ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சூறாவளி மற்றும் புயல் உருவாகுவதை கண்டறியும் விதத்தில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப கருவிகள் மாற்றம் செய்து அவை பொருத்தப்பட்டுள்ளன.

அவை தற்போது விர்ஜினியா கடற்கரை பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது, ஆளில்லா விமானங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் பல தகவல்களை அறிய முடியும். ஏனெனில் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து 30 மணி நேரம் பறக்கக்கூடியவை.

மேலும் இது 21 ஆயிரம் மீட்டர் அதாவது 69 ஆயிரம் அடி உயரத்தில் விண்ணில் பறக்கும் திறன் படைத்தது.

இவை ஜெட் விமானங்களை விட 2 மடங்கு அளவு திறன் கொண்டதால் புயல் மற்றும் சூறாவளி துல்லியமாக கணக்கிட்டு கண்டறிய முடியும். அது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த தகவலை நாசா மையத்தில் ஆளில்லா விமான திட்ட அதிகாரி கிறிஸ் நாப்டெல் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.