மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் நிலவரம்
மாலைத்தீவில், மமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008–ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அதில், மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார்.
ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், இராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத், ஜனாதிபதியானார்.
இந்நிலையில், 2–வது ஜனநாயக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய ஜனாதிபதி முகமது வகீத், முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், முன்னாள் ஜனாதிபதி கயூமின் சகோதரரும், மாலைத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிட்டனர்
இதில் முன்னால் ஜனாதிபதி முஹமத் நஷீத் 95224 (45.45%) வாக்குகளைப் பெற்று முதலாவதாகவும், மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளர் அப்துல்லாஹ் யாமீன் 53099 (25.35%) வாக்குகளைப் பெற்று இரண்டாவதாகவும், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராஹிம் 50422 (24.07%) வாக்குகளைப் பெற்று மூன்றவதாகவும், தற்போதைய ஜனாதிபதியும் வேட்பாளருமான டாக்டர் முஹமத் வாஹீத் 10750 (5.13%) வாக்குகளைப் பெற்று நான்காவதாக தெரிவு செய்யப்பட்டனர்.
எனினும் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை அதாவது 50% க்கு மேற்பட்ட வாக்குகளை பெறாததால் மாலைதீவு தேர்தல் விதிப்படி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட தேர்தலில் முன்னால் ஜனாதிபதி முஹமத் நஷீத் மற்றும் மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளர் அப்துல்லாஹ் யாமீன் போட்டியிட உள்ளனர்.
Post a Comment