Header Ads



லண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை (படம்)


இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியைக்கு லண்டன் பள்ளி வகுப்பறையில் குழந்தை பிறந்தது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் டயானா கிரிஸ் வீரமணி (30). லண்டன் மான்ஃபோர்ட்டில் உள்ள பிரைமரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் விஜய் வீரமணி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டயானா நேற்று பள்ளிக்கு வந்தார். வழக்கம் போல் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போன் செய்தனர். சிலர் ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கணவர் விஜய் வீரமணியும் அங்கு விரைந்தார். உடனடியாக அவசர அவசரமாக வகுப்பறையில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டயானாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகமானது. இதனால் உடன் வேலை பார்க்கும் ஆசிரியைகள் 3 பேர் அவருக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தனர். 20 நிமிடத்தில் டயானாவுக்கு அவரது பள்ளி வகுப்பறையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த குழந்தைக்கு ஜோனாக் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். டயானாவின் குழந்தை ஜோனாக் முதல் நாளே பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளான் என்று ஆசிரியர்கள் நகைச்சுவையாக கூறினர்.

 இதுகுறித்து டயானா கூறுகையில், வகுப்பறையில் எனக்கு குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியாகவே நினைக்கிறேன். எனது கணவர் பள்ளிக்கு வருவதற்கு முன்பு குழந்தை பிறந்து விட்டது. இது எனது இரண்டாவது குழந்தை. முதல் குழந்தை ஆஸ்பத்திரியில் பிறந்தது. குழந்தை பிறந்த வகுப்பறைக்கு ஜோனாக் ரூம் என்று பெயரிட்டுள்ளனர் என்று கூறினார். இதை தொடர்ந்து டயானா குழந்தையுடன் ராம்ஃபோர்டில் உள்ள குயின்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.