பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலய திறப்பு விழா
(ஹாலு ஹம்தா)
பொத்துவில் ஏழை மக்களினதும், தூர இடங்களில் மரணிப்பவர்களினதும் நலன்களையும், சிரமங்களையும் கருத்திற்கொண்டு பொத்துவில் நலன்விரும்பிகளால் பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அமைப்பிற்கான உத்தியோகபூர்வ காரியாலயத்தின் தேவையினை கருத்திற்கொண்ட அமைப்பின் உறுப்பினர்களின் அயராத முற்சியின் விளைவாக பெரிய பள்ளிவாயலுக்கு முன் அமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார நிலையத்தின் ஒரு அறை ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் சுமார் 4.00 மணிக்கு பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் மேற்குறிப்பிட்ட காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பொத்துவில் மக்கள் அனைவரும் வருகைதந்து காரியாலய திறப்பு விழாவில் கழந்து சிறப்பிற்குமாறு மிக அன்பாக வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
ஏ.எம்.எம் மன்சூர்
செயளாலர்
பொத்துவில ஜனாஸா நலன்புரி அமைப்பு.
Post a Comment