Header Ads



பொத்துவில் மாணவர்களின் அழுகுரல் கேட்கின்றதா..?

(ஹாலு ஹம்தா)


பொத்துவில் பிரதேசத்தில் காணப்ப்படும்  17 முஸ்லிம் பாடசாலைகள் பல வருடங்களாக  ஆசிரிய பற்றாக்குறையுடன் இயங்கிவருகின்றன. ஆசிரிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து கவனயீர்ப்பு பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்ட போதும் இதுவரையிலும் குறித்த ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே காணப்படுகின்றன.

பொத்துவில் மத்திய கல்லூரி வர்தகப்பிரிவு மாணவர்கள் ஆசிரியர் இன்மையால் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அட்டாலைச்சேனை அல் அர்ஹம் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் இன்மையினை  இணையம் ஒன்றின் ஊடாக செய்தி வெளியிட்ட மறு நாள் குறித்த வெற்றிடம் நிரப்பப்பட்டதானது பொத்துவில் மாணவர்களின் கல்வி வளர்சியில் வலையக்கல்விப்பணிப்பாலர், அதிகாரிகள் மேற்கொள்ளும் அசமத்தனத்தினை தெளிவுபடுத்திக்காட்டுகின்றது.

பிரதேச வாதத்தினை மறந்து கல்வி அதிகாரிகள் பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரய வெற்றிடங்களை நிரப்புவதற்கு குறுகிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா..?

No comments

Powered by Blogger.