Header Ads



அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு

கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி மக்கள் புலிகளினால் 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டு 'அகதி' என்ற அடையாளத்துடன் பல துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்ததை நாமறிவோம். தற்போது அந்த அகதி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மீண்டும் தங்களது கிராமங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் வட மாகாண சபைத்தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் அமைச்சர் றிசாடின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தங்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மன்னார் முசலிப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கிழக்கு முதலமைச்சர் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, நானாட்டான், முசலி, அச்சங்குளம், தாறாபுரம,; சிலாவத்துறை மற்றும் பன்டாரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக முசலியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கையிலே மேற்கண்டவாறு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒரு இளம் துடிப்புள்ள சமூக ஆர்வம் கொண்ட அமைச்சர் றிசாட் பதிவுதீனை நீங்கள் அமைச்சராக பெற்றுள்ளீர்கள் எனவே, அவரின் செயற்பாடுகளுக்கு நீங்கள் பலம் சேர்க்க வேண்டும். அவர் மீள் குடியேற்றம் தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கடுமையாக உழைத்து வருகின்றார. அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தின் கீழ் வன்னி மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக றிசாட் செயற்பட்ட காலத்தில் உங்களை மீள் குடியமர்த்த வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இன்றும் மேற்கொண்டு வருகின்றார் அவரின் முயற்சிகளை நாங்கள் ஊக்கப்படுத்தி வந்திருக்கின்றோம்.

எனவே, நடைபெறவள்ள வட மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் றிசாட் பதிவுத்தீனின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தார்மீக கடமை மன்னார் மாவட்ட மக்களாகிய உங்களது பொருப்பாகும். இவ்விடத்தில் ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.  கடந்த காலத்தில் மூதூர், தோப்பூர் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளினால் எமது மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள் அப்போது அமைச்சர் றிசாட் பதிவுத்தீன் அடங்களாக நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு 40 நாட்களிலே அகதிகளாக்கப்பட்ட அம்மக்களை மீண்டும் குடியமர்த்தினோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அன்று 1990 இல் நீங்கள் வெளியேற்றப்பட்ட போது அப்போதைய ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கமானது உங்களை மீள் குடியேற்றும் விடயத்தில் அலட்சியமாகவே செயற்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, கடந்த 23 வருடங்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் உங்களது இருப்பிடங்களுக்கு திரும்பியிருக்கின்றீர்கள் என்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயங்கரவாதத்தை அழித்ததனாலேயே என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நடைபெறவுள்ள இத்தேர்தலில் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வெறுமனே ஏனைய அரசியல் கட்சிகளின் வார்த்தைகளை நம்பி உங்களது வாக்குகளை சிதைத்து விடாமல் அமைச்சர் றிசாதின் கைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நீங்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

அண்மையில் கிழக்கு மாகாண சபையின் சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வட மாகாண சபை அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார்கள.; அவர்களிடம் அமையவுள்ள வடக்கு மாகாண சபையை உரிய முறையில் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

வட மாகாணத்தை பாரிய அபிவிருத்தியடைந்த மாகாணமாகவும் ஏனைய மாகாணங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாகாணமாகவும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியமைக்கும் கட்சியாக மாற்ற வேண்டும் அப்போதுதான் உங்களது மீள் குடியேற்றம் முழுமைபெரும் எனவே, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியமைக்கும் கட்சியாக மாற்றுவதுடன் அமைச்சர் றிசாத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

என அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் குறிப்பிட்டார் இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் பிரதியமைச்சர் சரத் குமார குணவர்த்தன கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம். எஸ் சுihயர், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தீன் மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் அடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. யாரங்கே....முதலமைச்சருக்கு பேசத் தெரியாது என்று சொன்னது.....?

    ReplyDelete

Powered by Blogger.