Header Ads



நான் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும் - ரவூப் ஹக்கீம்

(இ. அம்மார்)

இந்த தேர்தலை ஒரு தோல்வி மனப்பான்மையாக மாற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு நாங்களே செய்யும் ஒரு அநியாயமாகத்தான் இருக்கும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் மாகாண சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பு குருநாகல் புளு ஸ்கை ஹோட்டலில் 28-09-2013 நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

எந்த வகையிலும் இந்த தேர்தல் தோல்வி மனப்பான்மையுடன் அணுகுகின்ற விடயமல்ல. இன்றைய அரசியல் கள நிலவரத்தைப் பொறுத்தவரையில் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி குறித்து எல்லோரும் திருப்தியுடன்தான் இருந்தார்கள் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். இங்கு இரு ஆசனங்கள் நிச்சயமாக கிடைக்ககும் என்ற நம்பிக்கை எல்லோருடைய மனதிலும் இருந்தது. ஆனால் கள நிலவரங்களின் யதார்த்தத்தைப் பார்க்கின்ற போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் வடக்கிலே ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக நடத்த விரும்பாத ஒரு தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எங்கே வெற்றிபெற முடியுமோ அங்கே மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்று நிச்சயமாக வெற்றிபெறக் கூயடி  மாகாண சபைகளைத் தெரிவு செய்து தேர்தலை நடத்தினார்கள். அந்த தேர்தலில் அரசாங்கத்தினுடைய அனுமானம் மிகத் தெளிவானது.

இம்மாகாணத்தில் அரசாங்கம் 69 சத விகிதமான  வாக்கை அரசாங்கம் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்கு வீதம் 21 சத வீதமாகும். இதை விட இந்தக் கட்சி ஒரு போது குறைவாகப் பெற்றிருக்காது எனக் கருதுகின்றேன். ஏனைய வெற்றி பெற்ற மூன்று கட்சிகளும் சேர்ந்து 10 சத வகிதம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எங்களுக்கும் இடைவெளியாக மூன்று கட்சிகளும் சேர்ந்து 50 சம விகிதம் எனக் கொள்ளுமளவுக்கு முக்கிய விடயம் அமைந்துள்ளது. பிரதான கட்சி எந்த நிலையை எட்டியுள்ளது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் தோல்வியை நாம் பார்க்க வேண்டும். தேர்தல் நடந்து முடிந்த எல்லா மாவட்டங்களிலும் ஒரு பிரதிபலிப்பை நாங்கள் காண்கின்றோம். கள நிலவரம் வித்தியாசமானதாகவே இருந்தது. இதில் முக்கியமாக நீண்ட காலத்திற்குப் பிற்பாடு பிரதான இரு எதிர்கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸை இலக்கு வைத்து தாக்கியது. முஸ்லிம் காங்கிரஸையே முஸ்லிம்களைக் கவரக் கூடிய கட்சியாக அடையாளம் கண்டார்கள். எங்களை பலவீனப்படுத்துவதில் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அக்கட்சிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அனைவரும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தோல்வி அடைந்துள்ளார்கள். வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கலாம் ஆனால் முஸ்லிம்களைக் காட்டுவதற்கு ஒருவரும் இல்லை என்ற நிலவரம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நிலையிலேயே நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் இதனை தோல்வி மனப்பான்மையுடன் அணுக வேண்டிய அவசியமில்லை.

அது மட்டுமல்ல இந்தக் கட்சியை ஒட்டு மொத்தமாக பல ஊர்களில் பள்ளிவாசல்களிலே தேர்தல் பிரச்சாரம் செய்ய அங்கீகாரம் வழங்கினார்கள் என்பது மிகப் பெரிய விடயம். தற்போது கூட கட்சியின் மிக முக்கிய தலமாகவுள்ள அம்பாறை மாவட்டத்தில் எந்தப் பள்ளிவாசல்களிலும் கால் வைக்க முடியாது.. எந்தப் பள்ளிவாசல்களிலும் அரசியல் கூட்டம் நடத்த முடியாது. இருந்தாலும் குருநாகல் மாவட்டத்தில் எனது கூட்டத்தை நடத்துவதற்கான ஒரு நிலவரம் இருந்தது என்பதை ஒரு வித்தியாசமானதும் ஒரு சாதகமானதுமான சூழ்நிலை காணப்பட்டது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது எந்தக் காரணம் கொண்டும் தோல்வி மனப்பான்மையுடன் பார்க்கின்ற விடயமல்ல. எனினும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்புடன் நீங்கள் இருந்ததை நான் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இங்குள்ள வித்தியாசமான களநிலவரம் எனும் போது இங்கு முதல் அமைச்சர் என்ற பெயரில் ஒருவர் வரப் போகிறார் என்பதால் அதற்குப் பின்னால் திரிகின்றார்கள் என்பது எங்களுடைய பலவீனங்களில் ஒன்று. அதிகாரத்திற்குப் பின்னால் செல்லும் கூட்டத்தை நாங்கள் அவதானிக்கின்றோம். ஒட்டு மொத்தமாக ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது குருநாகல் மாவட்டத் தேர்தல் முடிவு திருப்திகரமாகவே உள்ளது. எனவே எந்தக் காரணம் கொண்டும் ஒரு விரக்தியோடு பார்க்க வேண்டிய அவசியமில்iலை. ஆனால் இந்தக் கட்சியை இன்னும் சிறப்பாக மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான பாரிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.

குருநாகல் மாவட்ட முஸ்லிம் ஏனைய  மாவட்டங்களைவ விட முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற பிரக்ஞையோடு இருந்தார்கள். அதன் விளைவாகத்தான் பள்ளிவாசல்களில் கூட்டம் நடத்தினார்கள் அதற்கான சூழல் ஏற்பட்டது. ஏனைய கட்சிகளில் முஸ்லிம்கள் தோல்வி கண்டியிருக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்த்திற்கு இருக்கின்ற எதிர்ப்புணர்வு வெளிக்கிளம்பாமல் அடிக்கடி தேர்தல் நடைபெறுதல் வேண்டும். இனிமேல் வடமேல் மாகாணத்தில் எந்தவிதமான எந்தவிதமான எதிர்ப்புணர்வும் இடம் பெறாது. அது அப்படியே படுத்து விடும். வடமேல் மாகாண சபை என்பது ஒரு வித்தியாசமானது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.