Header Ads



மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் பெண் கைது


சீனாவில் மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து நெரிசல் மிக்க யுசெவ் சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பெண் ஒருவர் குழந்தையை மடியில் வைத்து கொண்டு மொபட் ஓட்டி செல்வது தெரிந்தது.

மேலும் அந்த பெண் தனது 8 மாத குழந்தையை மடியில் வைத்து கொண்டு மொபட் ஓட்டியபடியே தாய்ப்பால் கொடுத்தபடி சென்றதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த சாலையில், இவ்வாறு செல்வது மற்றவர்களின் கவனத்தை குலைத்து விபத்து ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையும் தாயும் கூட உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. மற்ற வாகன ஓட்டிகளுக்கு இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை மடக்கி கைது செய்தனர்.

ஏற்கனவே 2008 ஜூன் மாதம் கேதரின் என்ற பெண், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் இருந்து பிட்ஸ்பர்க் நகருக்கு வாகனம் ஓட்டியபடியே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.