Header Ads



தேர்தல் முடிந்ததும் ஹக்கீமும், பசீரும் மஹிந்தவுடன் புரியாணி சாப்பிடுவார்கள்

ஹக்கீமுக்கும் பஷீர் சேகு தாவுதுக்குமிடையில் மோதல் என்பது தேர்தலுக்காக முஸ்லிம் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நாடகமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். புத்தளம் நகரில்  நடைபெற்ற ஐ. தே. க.வின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் முஸ்லிம் காங்கிரசினர், முஸ்லிம் மக்களை எவ்வாறு ஏமாற்றுவது என்பதை நன்கு திட்டமிட்டு ஏமாற்றுவதில் மகா வல்லவர்கள். சுயநலன், ஏமாற்று என்பதை தவிர வேறு எதுவுமே இந்தக்கட்சியினருக்கு தெரியாது. அதே போல் மீண்டும் மீண்டும் ஏமாறுவதில் புகழ் பெற்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகமும் உள்ளதுதான் வேதனையானது.

இந்த பலவீனம் காரணமாகவே ஹக்கீமுக்கும் பசீருக்குமிடையில் பிரச்சினை போன்று மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைச்சர்களுமே அரசாங்கத்தின் தரகர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.  இது நன்கு திட்டமிடப்பட்ட நாடகமாகும்.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் இருவரும் இணைந்து வேறு நாடகங்களை அரங்கேற்றினர். பசீரின் அமைச்சுப்பதவி ராஜினாமா என்பது ஒரு ஏமாற்று நாடகம் என்றும் தேர்தலின் பின் முஸ்லிம்கள் விற்கப்பட்டு முன்னரை விடப்பெரிய அமைச்சு பெறப்படும் எனவும் பகிரங்கமாக நான் அடித்துக்கூறினேன்.  கடைசியல் நாம் சொன்னதுதான் நடந்தது. பாவம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஏமாந்து நின்றார்கள்.

இன்றைய நிலையில் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் மக்களுக்கு வெறுப்பிருப்பதால் அவர்களின் வாக்குகள் ஐ தே கவுக்கு சென்று விடும் என்பதற்காகவே அரசாங்கத்தின் அணுசரணையுடன் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த சிலரை வட மாகாணத்தில் அரச கட்சியுடன் பசீர் நிறுத்தியுள்ளார்.

இவ்வாறு வடக்கில் அரச கட்சியில் இணைந்து போட்டியிடுவோரை அக்கட்சி இடை நிறுத்தியுள்ளது. ஆனால் அவர்களை அரச கட்சியில் சேர்த்து விட்ட பசீரை கட்சி இடைநிறுத்தவில்லை. இதன் மூலம் மு. கா ஆதரவாளர்களும் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுகிறர்கள் என்பது தெளிவாகிறது.

ஹக்கீம் தன்பாட்டுக்கு தனியாக வாக்குகளை பெறுவதுடன் பசீர் தனது ஆட்கள் மூலம் தனியாக சில வாக்குகளைப்பெற்று இருவரும் இணைந்து முஸ்லிம் வாக்குகளை அரசுக்கு பின்கதவால் கொடுத்து விட்டு அரசிடம் நல்ல பிள்ளைகளாக இருப்பதற்கே இந்த நாடகம் நடக்கிறது. இது புரியாமல் பாவம் முஸ்லிம்கள் ஏதேதோ கற்பனையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுற்றதும் ஹக்கீமும், பசீரும் ஒன்றாக இருந்தே மஹிந்த ராஜபக்ஷவுடன் புரியாணி சாப்பிடப் போகிறார்கள் என்பதை தெரிந்தும் புரியாத சமூகம் போல் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருப்பதுதான் மிகப்பெரிய பரிதாபமாகும். இந்தக்கள்ளத்தனத்தை முறியடித்து நமது சமூகத்துக்கெதிராக நடக்கும் பள்ளிவாயல் உடைப்பு போன்ற அநியாயங்களை நாம் எதிர்க்கின்றோம் என்ற செய்தியை தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்ல வேண்டுமாயின் முழு முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஐ தே கவுக்கே வாக்களிக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில்  நமது முடிவாக இருக்க வேண்டும்.

2 comments:

  1. எல்லானும் கள்ளன் தான் .
    தொப்பி போட்டு பேசின மட்டும் வீரம் இல்ல

    ReplyDelete
  2. thampy, nalla sinthiyungo, ivar solrathu nootrukku nooru unmai. summa emanthu pohame nalle mudivaha edungo.

    ReplyDelete

Powered by Blogger.