Header Ads



சிங்கள ராவய அமைப்பின் பிக்குகளுக்கு பிடிவிராந்து

சிங்கள ராவய அமைப்பின் பிக்குகளுக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகளுக்கு இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி நடத்தப்படவிருந்த கூட்டம் கலகத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து பொலிஸார் நீதிமன்றின் அனுமதியுடன் கூட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.

எனினும், இந்த தடையை மீறி சிங்கள ராவய அமைப்பு களுத்துறை மக்கானே பிரதேசத்தில் கூட்டத்தை நடத்தியிருந்தது. இவ்வாறு நீதிமன்றின் உத்தரவினை மீறிச் செயற்பட்டமைக்காக குறித்த சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

2 comments:

  1. சட்டத்தையும் நீதியையும் மதிக்காதவர்கள் எவராக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன்னிறுத்தப்பட்டு. தண்டனை வழங்கப்படவேண்டும்.

    ReplyDelete
  2. தீர்ப்பு நீதியானதாக அமையுமா? பொறுத்திருந்து பார்போம்

    ReplyDelete

Powered by Blogger.