Header Ads



விஹாரையில் திருட முயன்றவர் மீது பொதுமக்கள் தாக்குதல்

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி  - மாபனாவதுர  புராதன விஹாரை ஒன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலீஸார்  (2013 09 14) இரவு கைது செய்துள்ளனர்.

கண்டி பிரதேசத்தில் பலமைவாய்ந்த இவ் விஹாரையை மூன்று முறை உடைத்து மடிக்கனனி ஒன்று உற்பட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன் நேற்று இரவு பொருட்கள் திருடிய போது பிரதேச வாசிகள் அவரை மடக்கி பிடித்துள்ளதுடன், சந்தேக நபர் பிரதேச வாசிகளை தாக்கி உள்ளதாகவும் பின்னர் பிரதேச வாசிகள் தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.