Header Ads



பொத்துவில் பெரிய பள்ளிவாயல் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது (படங்கள்)


(ஹாலு ஹம்தா)

 http://www.youtube.com/watch?v=Jst3fmXnFgg

பொத்துவில் பெரிய பள்ளிவாயல் சகல வசதிகளைக்கொண்டதொரு ஆண்மீக வழிகாட்டல் மையமாக திகழ வேண்டும், அதற்காக பள்ளிவாயல் நவீன முறையில் புணர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பதனை உணர்ந்த பொத்துவில் வாழ் நல் உள்ளங்களின் அயராத முயற்சியின் காரணமாக பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடத்திற்கான அடிக்கல் மிக விமர்சயாக ஆத்மீக முறையில் நடப்பட்டது.

அடிக்கல் நடும் விழாவில் பொத்துவில் உலமாக்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கழந்து கொண்டனர்.  “தான் செய்தின் காரணமாக இறைவன் ஒருவறை விரும்பிவிட்டான் என்றால் மீண்டும் மீண்டும் இறைவன் பாதையில் நற்காரியங்கள் செய்வதற்கு அவரயே இறைவன் பயண்படுத்துவான்” என விசஷேட உறை நிகழத்திய, அனைத்துப்பள்ளிவாயகள் சம்மேலனத்தின் தலைவரும் பொத்துவில் அரபிக்கல்லூரியின் விரிவுரையாளருமான அஷ்ஷெக் M.L. பஸீல் மெளலவி தெரிவித்தார்.

மேலும் தனது உரையில், பொத்துவில் பெரிய பள்ளிவாயல் கட்டப்பட்ட நிகழ்வுகளையும், அதற்காக பொத்துவில் மக்கள் வழங்கிய ஒத்தாசைகளையும் சுட்டிக்காட்டியதோடு, தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு பொத்துவில் மக்களை வேண்டிக்கொண்டார். உரையினை அடுத்து தக்பீர் முலக்கத்துடன் அடிக்கல் நடப்பட்டதோடு விஷேட துஆ பிரார்தனையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பொத்துவில் பெரிய பள்ளிவாயல் நவீண முறையில் புணர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என கணாகண்டு அதற்காக தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்ட பொத்துவில் பிரதேசத்தின் பாராலுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அஸீஸ் அவர்களின் மேலாசை செயல் வடிவிற்கு வந்த நாள் இது என சொல்ல முடியவதோடு, பொத்துவில் மண்னில் உதித்த ஒரு உத்தமரால் கட்டுமாணத்திற்கான அணைத்து நிதியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.