Header Ads



நரேந்திர மோடிக்கு தூக்கு தண்டனை விதிப்பார்களா..?

13,09.2013 அன்று காலை ஊடகங்களில் வந்த செய்தி; தில்லி பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்த நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிப்பு.

அதே 13.09.2013 அன்று மாலை ஊடகங்களில் வேறு ஒரு செய்தி; பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.

இவ்விரு அறிவிப்புகளும் ஒரே நாளில் நிகழ்ந்தது தற்செயலாக இருந்தாலும் இவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள ஓர் ஒற்றுமையையும் அதற்கு கிடைத்த பரிசில் உள்ள வேற்றுமை குறித்துமே கேள்வி.

தூக்கு தண்டனை கூடுமா, கூடாதா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தவறுக்கான எல்லா சாத்தியகூறுகளையும் திறந்து வைத்து விட்டு தண்டனையாக தூக்கு வழங்க கூடாது என்ற சர்ச்சையும் ஓடி கொண்டிருக்கிறது. தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லும் திமுக தலைவர் கருணாநிதி கூட இவ்விஷயத்தில் தூக்கு தண்டனை சரியே என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்விஷயத்தில் தீர்ப்பளித்த நீதிபதி கூட குற்றம் செய்தவரின் வயது பற்றிய சர்ச்சையை ஒதுக்கி விட்டு அரிதினும் அரிதான வழக்காக கருதி தூக்கு தண்டனை கொடுத்துள்ளார். மேல் முறையீட்டில் எப்பிரச்னையுமில்லை எனில் நிச்சயம் நால்வருக்கும் தூக்கு உறுதி.

ஒரு இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததற்கு தூக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டுமெனில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட குஜராத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன என்பது விளங்கவில்லை. குஜராத்தில் நடந்தவைகள் அரிதினும் அரிதானதாக இல்லாமல் சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றா என்ன?. ஏதோ ஒரு பெண்ணை பார்த்தவுடன் உணர்வுகளின் உந்துதலால் காமம் தலைக்கேறி வன்புணர்வு செய்த அக்காமுகர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கை ஆதரிக்கிறேன்.

ஆனால் அதை விட பன்மடங்கு கொடுமையானதாக, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசே முன்நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று, நூற்றுக்கணக்கில் இளம் பெண்களை வன்புணர்வு செய்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கியதற்கு என்ன தீர்ப்பை இந்திய நீதிமன்றங்கள் தந்தன. தாயின் வயிற்றில் உள்ள சிசுவை நெருப்பில் போட்டு கொளுத்தியதை பாபு பஜ்ரங்கியே பெருமையாய் தெஹல்காவின் முன் சொன்னதற்கு இது வரை தூக்கு வழங்கப்படவில்லையே. அது போல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் பங்கு பெற்றதாக நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட மாயா கோட்னானியும் தூக்கில் இடப்படவில்லை. இவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்களை வழிநடத்திய மோடியோ இந்திய பிரதம வேட்பாளாரக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி கட்ட வில்லையென்றால் லோனில் வாங்கிய பசுமாட்டை பிடுங்கி கொண்டு செல்லும் வங்கிகளில் கோடிக்கணக்கில் வங்கி பணத்தை ஆட்டையை போட்டால் கண்டு கொள்வதில்லை. அது போல் வன்புணர்வே என்றாலும் செய்த தவறை ஒத்து கொண்டு நீதிமன்றத்தில் ஒத்து கொண்டால் தூக்கு தண்டனை வழங்கப்படும், அதுவே அதிகாரத்தில் இருந்து கொண்டு நூற்றுக்கணக்கில் பெண்களை வன்புணர்வு செய்தால் இந்திய பிரதமராகலாம். இனியும் சட்டத்தின் முன் சமம் என்று எவராவது சொன்னால் அவ்வளவு தான். inner

1 comment:

  1. மதச்சார்பற்ற நாடு என்று இந்தியாவைக் கூறுவது, வெறும் பேச்சில் மட்டும் தான் அது முழுக்க முழுக்க இந்துக்கள் பக்கம் சார்பாக முடிவெடுக்கும் அரசியல் சித்து விளையாட்டு நடக்கும் நாடுதான். பெயரளவில் ஒரு சீக்கிய பிரதமர், இடைக்கிடை ஒரு முஸ்லிம் ஜனாதிபதி, உலகை ஏமாற்ற,ஒரு உண்மையான ஜனநாயக நாடாக இருந்தால் பல நரேந்திர மோடிக்கள் தூக்கில் தொங்கியிருப்பார்கள். இனவெறியன்கள் பணபலத்தோடு ஆட்சியில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் " இதுதான் நவீன ஜனநாயகம்"

    ReplyDelete

Powered by Blogger.