Header Ads



முஸ்லிம்களுக்கான அநீதிகளை கோத்தா கண்டுகொள்ள தவறியுள்ளார்

(Gtn) பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சு ஒன்றின் செயலாளர் என்ற அரசாங்க உத்தியோகத்தைத் தாண்டி அரசியல் செயற்பாடுகளில் ஈடுகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் மரபு ரீதியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனால் எவருக்கும் பாதிப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள கடும்போக்குவாதிகளினால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்டுகொள்ளத் தவறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிங்கள கடும்போக்குவாதத் தரப்பினருக்கு பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ ஊக்கமளிக்கின்றாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுச் செயலாளர் என்ற போதிலும் கோதபாய ராஜபக்ஷ அரசியல்வாதியைப் பேர்று செயற்படுகின்றார் என வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

  1. உண்மையும் அதுதான் நமது அரசியல் வாதிகளுக்கு கோட்டாபே என்றால், வயிற்றைக் கலக்கி இரண்டுக்கு வந்துவிடும்

    ReplyDelete

Powered by Blogger.