Header Ads



புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

(TM) புத்தளம்,சென். அன்றூஸ் கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்குச்சீட்டுகள் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய இரண்டு பொதிகளே நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்றிரவு ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை அவதானித்ததுடன் பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. அனாகரிகமான வேளையிது, ஜனனாயகத்திற்கு எதிரான வேளை, மனசாட்சிக்கு விரோதமான வேளையும் கூட இது. தவனைகள் கடத்தாமல், ஒரே நாளில் இதனது விசாரனை முடிவுற்று, குற்றம் செய்தவர், பாரபட்சமின்றி தண்டிக்கபட்டு, மீண்டுமொரு தேர்தலுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என எதிர்பார்கிறோம். இதே வேளைதான் எந்த தேர்தல் வந்தாலும் எங்கு நடந்தாலும் செய்யப்பட்டு ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சியைப்பிடிப்பதற்கான காரணம். கண்கானிப்புக்குழுக்கள் எத்தனை இருந்தும் என்ன பலன்? அனைவரின் கண்களிலும் மண்ணையல்லவா தூவி வித்தையை காட்டி விட்டார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.