Header Ads



கொழும்புக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம்..?

(TL) வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகருக்குள் நுழையும் சகல வாகனங்களுக்கும் கட்டணமொன்றை அறவிடுவதற்காக அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் இதனை உள்ளடக்குவது தொடர்பாக அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக தற்போது அதிகாரிகளுக்கிடையே கலந்துரையடலொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கமைய காலி வீதி கண்டிவீதி மற்றும் நீர்கொழும்பு வீதி அடங்கலாக கொழும்புக்குள் வாகனங்கள் நுழையும் சகல வீதிகளிலும் இதற்காக விசேட நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் நிலையங்களில் கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன் அந்தப் பற்றுச்சீட்டை வாகனங்கள் கொழும்பு நகரிலிருந்து வெளியேறி செல்லும் வரை கவனமாக வைத்திருக்க வேண்டிய நடைமுறை  பின்பற்றப்படவுள்ளது.

 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான யோசனைகள் கோரப்பட்ட வேளையில் கொழும்பு மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த யோசனைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2 comments:

  1. ராஜ பக்ஷா அன் கம்பனி ஒழிக.....

    ReplyDelete
  2. வங்குரோத்தில் ஓடும் அரசாங்கம் வீதிகளில் ஓடும் வாகனங்களுக்கும் வரி பெற முயற்சிப்பது, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அடியொற்றிய செயலாகும்.

    அரசின் இந்தத் திட்டம் காலப் போக்கில் எல்லா மாகாணங்களுக்கும், பிரதான நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்படலாம்.

    நாட்டின் நிதி நிலைமையைச் சீர்படுத்த அரசாங்கத்திலுள்ள தேவையில்லாத அமைச்சர்களையும், பிரதியமைச்சர்களையும் வீடுகளுக்கு அனுப்பினாலே கோடிக்கணக்கான ரூபாய் வருடாந்தம் திறைசேரிக்கு கிடைக்கும்.

    அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் படாடோப வாழ்க்கைக்காக நமது வாகனங்களுக்கு வரி விதிப்பது எந்த வகையில் நியாயம்?

    இலங்கையிலுள்ள ஒரு குடிமகன் ஒரு மோட்டார் வாகனத்தை வைத்திருந்தால் அதற்கு காப்புறுதிக்கட்டணம், புகை பரிசோதனைக் கட்டணம், வருடாந்த அனுமதிப் பத்திரக் கட்டணம், வீதிகளில் நிறுத்தும்போது உள்ளுராட்சி சபைகளின் அறவீடுகள், போதாக்குறைக்கு வீதியெங்கும் காணப்படும் மோட்டார் போக்கு வரத்துப் பொலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய கையூட்டு...

    அப்பப்பா.. கால்நடையாகவே காலத்தைக் கழித்து விடலாம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தாகன்குடி-

    ReplyDelete

Powered by Blogger.