தேர்தல்கள் செயலகத்தில் 'முறைப்பாட்டு இணைப்பு நிலையம்'
(ஏ.எல்.ஜுனைதீன்)
மத்திய, வடக்கு மற்றும் வடமேல் தேர்தல் சம்மந்தமாக இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் 'தேர்தல் முறைப்பாட்டு இணைப்பு நிலையம்' அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்புக்கு முன்னைய நாளும் வாக்கெடுப்புத் தினத்தன்றும் அதாவது 2013 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 21 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணி வரையான காலப்பகுதியினுள் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தேர்தல்கள் ஆணையாளருக்கு சமர்ப்பிக்க கீழ் காணும் தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொலைபேசி அல்லது தொலைநகல் இலக்கத்தை அழைக்க முடியாதவாறு நெரிசலாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வேறு மாவட்டம் ஒன்றின் இலக்கத்தைப் பயன்படுத்துவதில் தடைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment