Header Ads



புல்மோட்டை முஸ்லிம்களுக்காக போராடிய அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

10.09.2013ம் திகதி புல்மோட்டை 14ம் கட்டை பிரதேசத்தில் நில அளவை மேற்கொள்ள முயற்சித்தபோது பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குச்சவெளி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஆ.தௌபீக் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களான சல்மான் பதுறுதீன் ஜம்மியத்துல் உலமா சபையினர் பெரிய பளளிவாயல்களின் தவைர் மற்றும் பல பிரமுகர்கள் சம்பவ இடத்துக் சென்றனர்.

பின்னர் நில அளவையாளர்களை நிறுத்தும்படி மக்கள் வேண்டியதை அடுத்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கனேகொட குச்சவெளி பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்  வாஸ் பெரேரா மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர் பின்னர் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மா.ச.உறுப்பினர் அன்வர் கு.பி.சபையின் பிரதி தவிசாளர் தௌபீக் இருவரும் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பொலிஸாருடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நில அளவையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு திட்ட மிடப்பட்ட முறையில் நில அளவையாளர்களைக்கொண்டு முறைப்பாடு ஒன்று மா.சபை.உறுப்பினர் அன்வர் கு.பி.சபையின் பிரதி தவிசாளர் தௌபீக் புல்மோட்டை பெரிய பள்ளிவாயலின் தலைவர் கலீல் லெப்பை ஜம்மியத்துல் உலமா சபையின் உறுப்பினர் ஐயூப்கான் மௌலவி கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஐனியப்பிள்ளை பசீர் போன்றோர்  106ம் பிரிவின் கீழ் கடமைக்கு பங்கம் விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிவான் நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டு இவ்வழக்கு நீதவான் சசிதரன் முந்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொலிஸ் சார்பில் பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் பெரேரா தமது கருத்தை முன்வைத்தபோது இவர்கள் எதிர்தரப்பு சார்பில் பத்து சட்டத்தரணிகளால் விவாதிக்கப்பட்டு மக்கள் பிரதி நிதிகள் என்ற அடிப்படையில் இவர்கள் அரச கடமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கவில்லை என்றும் அத்தோடு முறையாக தமது கட்சிக்காரர்களால் பிரச்சிணை தீர்க்கும் நோக்கிலே உரிய இடத்திற்கு சென்றதாகவும் விவாதிக்கப்பட்டது பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 10.000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நில அளவையை தொடந்து மேற்கொள்வதற்காக நீதி மன்றின் அனுமதியைப் பெற்றுத்தருமாறு நீதிபதியிடம் பொலிஸ் அத்தியட்சகர் கேட்டபோது தன்னால் அதனை தரமுடியாது உயர் நீதி மன்றினாலே பெற்றுக்கொள்ள வேண்டும் எனகூறி எதிர் வரும் 18.09.2013ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது   

No comments

Powered by Blogger.