Header Ads



உலக அல்சீமர்ஸ் தினம்

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், அல்சீமர்ஸ் நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 21ம் தேதி உலக அல்சீமர்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அல்சீமர்ஸ் நோயை முதன்முதலாக ஜெர்மன் உளவியலாளர் அலாய்ஸ் அல்சீமர்ஸ் என்பவர் 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்நோய்க்கு இவருடைய பெயரே வைக்கப்பட்டது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் அதிகம் தாக்குகிறது. இது குணப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்று.

இந்நோய் மூளை செல்களை பாதித்து எண்ண ஓட்டங்களில் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது. மனக்குழப்பம், நீண்டகால ஞாபகமறதி மற்றும் பதட்டம் ஏற்படுகிறது. ஆண்டு செல்ல செல்ல பாதிப்பு அதிகமாகி வேலை, சாப்பாடு எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை உருவாகி மரணத்தில் முடிகிறது.

சந்தேகம் ஏற்பட்ட உடனே டாக்டரிம் சென்றும் பரிசோதிக்க வேண்டும். சர்வதேச அல்சீமர்ஸ் அமைப்பு, நோய் ,பாதித்தவர்களை பாதுகாப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகிறது. இதற்கான சிகிச்சைக்கு அதிக செலவு ஆகிறது.


ஐந்தில் ஒருவர் : 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகில் 2 கோடியே 66 லட்சம் பேர் அல்சீமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050ம் ஆண்டில் 85 பேரில் ஒருனர் இந்நோயால் பாதிக்கப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் தற்போது இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இங்கு 1 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கும் இந்நோய் உள்ளது. இதைத் தவிர 2010 கணக்கெடுப்பின்படி, நாட்டில் 37 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.