அதாவுல்லா ஒதுக்கும் நிதியை பயன்படுத்த கூடாதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதா..?
கல்முனை மாநகரசபை கட்டிடம் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் காலத்தில் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில்தான் கல்முனை பட்டின சபை, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என்பன இயங்கி வந்தன. இன்றும் அதே கட்டிடத்தில்தான் மாநகர சபை இயங்குகின்றது. சொல்லப் போனால் அரை நூற்றாண்டையும் தாண்டிய கட்டிடம் .
இந்த கட்டிடம் எம்.எஸ்.காரியப்பர் தொட்டு கல்முனையை ஆட்சி செய்த அத்தனை பேரும் இக்கட்டிடத்தில் அமர்ந்து எழும்பியவர்கள்தான் . மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பிரதேச சபையாக இருந்த கல்முனையை நகர சபையாக்கி ,மாநகர சபையாக்கி குறுகிய காலத்தில் அழகு பார்த்தார் ஆனால் இந்த பழமையான கட்டிடம் யார் கண்ணிலும் அகப்படவில்லை .
ஆனால் தற்போது கல்முனை முதல்வராக இருக்கும் சிராஸ் மாநகர சபை உறுப்பினர்களுடன் அண்மையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதவுல்லாவை அக்கரைப்பற்றில் சந்தித்து தனக்கு ஒரு வாகனமும், மாநகர சபை கட்டிடத்தை கடிதருமாரும் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதவுல்லா உடன் புதிய வாகனமொன்றை முதல்வருக்கு வழங்கியுள்ளார் .
மாநகர சபைக்கான் புதிய கட்டிடத்யும் தருகிறேன் அதற்கான வரைபடத்தையும் கேட்டு அதுவும் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை கட்டுவதற்கு பணம் ஒதுக்குகின்றேன் என அமைச்சர் கூறியிருந்தும் ஏன் அது தாமதமாக் உள்ளது...?
அதாவுல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாநகர சபை கட்டிடம் கட்டப்படக் கூடாதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. அவ்வாறென்றால் அந்த குறையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றுவதுதானே சாலப் பொருத்தம் எனவும் மக்களால் கூறப்படுகிறது.
இதைத்தான் சொல்வது.. வைக்கோற்போர் ... வேலை என்று.
ReplyDeleteஅதா என்ன அவரது பொக்கட் மணியிலா கட்டிடம் கட்டப் போகிறார்?
றவூப் ஹக்கீமும் சேர்ந்து முட்டுக் கொடுத்துள்ள அரசாங்கத்தின் பணத்தில்தானே கட்டப் போகிறார்? பின் ஏன் இதற்குள் அரசியல் மூக்கை நுழைக்க வேண்டும்?
அவர் மட்டும் அரச அமைச்சு அலுவலகத்தில் கொலுவீற்றிருக்கலாம். முதல்வர் சிராஸ் புதிய மாநகர சபைக் கட்டித்தில் அமர்ந்திருக்கக் கூடாதோ...?
முதல்வர் சிராஸ் அவர்களே...!
பதவியில் இருக்கும்போது பிரதேசத்திற்கும், பிரதேச மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி முடிந்தவற்றையெல்லாம் செய்து முடியுங்கள். மீண்டும் தேர்தல் வரும்போது, மக்களுக்கு நல்லது செய்திருந்தால் சுயேட்சையாக நின்றாலும் நீங்கள் வெல்வீர்கள. அதை விட்டு விட்டு கட்சி விசுவாசம் பாhத்து காலத்தை வீணடிக்காதீர்கள்!
இதென்ன நியாயம்?? முஸ்லிம்களின் வாக்குகளை மு.கா.வின் பெயரில் வாங்கிக் கொண்டு அரசாங்கத்திடம் விற்று அவரும், தவிசாளரும் அமைச்சர்களாக ஆகலாம்.
மாநகர முதல்வர் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுடன் நல்லுறவு பாராட்டி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடாது..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-