Header Ads



காத்தான்குடிப் பிரதேசத்தில் அமைக்கப்படும் வீதிகளில் பாரிய மோசடி

(ஸபீல் நளீமி – நகர சபை உறுப்பினர் - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்)

காத்தான்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்திகளில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெறுவது சம்பந்தமாக பல்வேறு முறைப்பாடுகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நகர சபைக்கும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும்  தெரிவித்த போதிலும் அவர்கள் அதில்  போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது விசனத்திற்குரியதாகும்.

ஏற்கனவே, வீதி அபிவிருத்தி தினைக்களத்தினால் JAICA  திட்டத்தில் நிருமானிக்கப்பட்ட காத்தான்குடியில் அமைக்கப்படுகின்ற வீதிகள் தரமற்றதாக அமைக்கப்பட்டதை நாம் பல தடவை சுட்டிக் காட்டியிருந்தோம். அதனடிப்படையில் தற்போது கொங்கிறீட் வீதிக்கு மேல் தார் ஊற்றி அதனை மறைக்கின்ற படலம் மேற்கொள்ளப்படுகிறது. 

காத்தான்குடி 6 ஜாமிஉழ் ழாபிரீன் வீதி 10.12.2009ம் திகதி சுமார் 7.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் கொங்கிறீட் வீதியாக அமைக்கப்பட்டு  மிகக் கோலாகலமாக பிரதியமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் மூன்றரை வருடங்களுக்குள் அவ்வீதி மிக மோசமடைந்து காணப்படுவதையும்   வடிகான்களுக்கு மேலால் போடப்பட்டிருந்த மூடிகள் உடைந்து  காணப்படுவதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.   இவ்வீதிகள் நகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டது மாத்திரமன்றி அதற்கான இறுதிக்கட்ட கொடுப்பணவு விண்ணப்பத்திலும் அவர்கள் கையெழுத்தும் வைத்துள்ளனர். இவ்வாறு பாரிய நிதியைக் கொண்டு அமைக்கப்பட்ட வீதிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் மோசமடைவது இவ்வீதிகள் அமைப்பில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

No comments

Powered by Blogger.