Header Ads



டெங்கு நுளம்பின் மூலமாக சுமார் மூன்றரைக் கோடி ரூபா வருமானம்..!

(ஏ.எல்.ஜுனைதீன்)

இவ்வாண்டு கடந்த எட்டு மாதங்களில்  டெங்கு நுளம்பின் மூலமாக சுமார் மூன்றரைக் கோடி ரூபா வருமானம் கிடைத்திருக்கிறது. ஆச்சிரியமாக இருக்கின்றதா? ஆம், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சூழ்நிலையை வைத்திருந்தவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் அபராதப் பணமாகச் சேகரிக்கப்பட்டுள்ள பணமே இவ்வாறு வருமானமாகக் கிடைத்துள்ளது.

இத்தகவலை இலங்கை பொதுஜன சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாத காலப் பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சூழ்நிலை உண்டா..? என 7 இலட்சத்து 18 ஆயிரத்து 582 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு டெங்கு நுளம்பு தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் உதாசீனம் செய்த 7 ஆயிரத்து 912 பேருக்கு  எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் மூலமே அபராதம் விதிக்கப்பட்டு  இத் தொகை வருமானம் கிடைத்திருக்கிறது.

1 comment:

Powered by Blogger.