Header Ads



அரபுலகப் புரட்சியிலிருந்து..!

(அபு அரிய்யா)

என் உம்மத்தின் தேசமே!
உனக்கென்ன நேர்ந்தது
ஈமானியப் பிரளயம்
ஊற்றெடுத்ததாய் - அந்நியம்
உணர்கிறது.

இறை திருப்தியே! – உன் இலக்கான போது
மனித அடிமைத்துவம் ஏதுனக்கு
வாய்மூட மௌனியாக்கி
ஷெய்தானிய அரசை ஆளுகையாக்கி
உன்னுலகுக்குள் மேற்கு வாழ்ந்த – காலம்
மலையேறிப் போயாச்சு

உன் புருவத்தில் தெரிகிறது
புதிய தேசத்தின் - கிலாஃபத்
அதனால்தான்
தூக்கமிழந்து உணர்வுதெளிந்து
இலக்கை நோக்கி நகர்கிறது – நீ
ஈன்ற முஃமின்களின் புனிதப் பாதம்

ஒரு போதும் ஓயாது – நீ
கொண்ட கொள்கைக்கான போராட்டம்
அறுக்கட்டும் அழிக்கட்டும் - சிறைப் பிடிக்கட்டும்
சத்தியத்தைக் கண்டு அணுகுண்டு போடட்டும்
கொன்று விட்டதாய், வேரோடு அழித்து விட்டதாய்
ஷெய்த்தானியம் திருப்தி காணட்டும் - இதுவெல்லாம்
உன் ஈமானை என்னதான் செய்திடப் போகிறது.

மதுவுக்கும் மாதுவுக்கும் - மதம் கொண்ட ஆட்சிக்கும்
மண்டியிட்டுக் கிடக்கும் - உன் விரோதி 
வாழ்வையும் மரணத்தையும்
படைத்தவனுக்கே பரிசாக்கி வாழ்ந்திடும் - உன்
இலட்சியம் கண்டு அதிர்கிறது அவசரப்படுகிறது
பொறுக்க முடியாமல் பொங்கி எழுகிறது
இத்தனையையும் மீறி – நீ உலகாலும் நல்லாட்சி
விரைவாக வரப்போவதுதான்; உண்மையாச்சி.

1 comment:

Powered by Blogger.