Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் பசில் ராஜபக்ச தலையீடு

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் சாத்தியம் இருப்பதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இதுதொடர்பில் அமைச்சர் றிசாத், பசில் ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளதாக அறியவருகிறது.

இதையடுத்து பசில் ராஜபக்ச நகர அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் பிரதேச முலிம்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு மாற்றமாக எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

அதேவேளை எதிர்வரும் 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவடைந்தவுடன் தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒன்றிணைந்து முக்கிய கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அறியவருகிறது.

5 comments:

  1. நம்பாதே காரியத்தை இன்றே செய்து முடி. நாளை பார்க்கலாம் தேர்தலின் பார்க்கலாம் என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம். தேர்தல் முடிவடைந்தபின் அவர்கள் நினைத்தபடிதான் செய்வார்கள்.

    ReplyDelete
  2. தேர்தல் முடிந்த பின் கலந்துரையாடி முடிவெடுப்பது என்பது கண்ணாம்பூச்சி விளையாட்டு! மாத்தளை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களுக்கு தமது வாக்குரிமையை அளிப்பதற்கு முன்னால் இந்தப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. ஓஹ் தேர்தலுக்குப் பிந்தான் உடைப்போம் என்பதை சூட்சுமமாய் சொல்றாங்களோ ?
    நம்மட இக்கோடாலிக்காம்புகள் எல்லாம் இப்படித்தான் , பிரச்சனைகழுக்கெல்லாம் மூலகாரணிய தடை செய்ய வக்கில்லாம , அதன் நுனிப்புல்லை மட்டும் மேய்வதற்கு எத்தனிப்பதற்காய் ஓர் மாயையை காட்டுவார்கள்.

    ReplyDelete
  4. election kaalamthaan elloarudaiya pandigaikkaalam.KODUKKIRAZAYUM,VAANGIRAZAYUM
    INDTHAKKAALANGALIL THAAN NADAATHTHGIRAARGAL.VADAKKITKU YAALDEVIYE
    ELECTION PARISHAAGATHAANEY KIDAIKKUZU.HIP HIP HURRAH.

    ReplyDelete

Powered by Blogger.