மாதம்பை இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அல்லாஹ்வின் அருளினால் தனது கல்விப் பயணத்தில் கால் நூற்றாண்டை தாண்டி பயணித்துக் கொண்டு இருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 22 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் கல்விப்பயணம் அல்லாஹ்வின் அருளால்; இன்று குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தைக்கண்டு வருகின்றது. இவ்வருடம் ஜனவரி மாதம் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா மற்றும் 25ஆவது வருடப்பூர்த்தி விழா என்பன அல்லாஹ்வின் அருளால் மிகச்சிறப்பாக நடைபெற்றமை தாங்கள் அறிவீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு என்பது அக்கல்லூரியின் மிக முக்கிய அங்கமாகும். அந்த வகையில் கால் நூற்றாண்டை தாண்டிய இஸ்லாஹிய்யாவின் பயணத்தில் அதனது பழைய மாணவர் அமைப்பி;ன் பங்களிப்பும் ஒத்தாசையும் மிகக் காத்திரமாக அமைந்துள்ளமை கண்கூடாகும்.
1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு 2013 இவ்வருடத்துடன் 10 வருடங்களை பூர்த்திசெய்கின்றது. இன்று 200 இற்கும் அதிகமான உருப்பினர்களை கொண்டுள்ள பழைய மாணவர் அமைப்பின் பணி மேலும் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் காத்திரமாக வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாஹிய்யா நிருவாகவும் மற்றும் அதன் பழைய மாணவர் அமைப்பான யுடரஅni யுளளழஉயைவழைn உம் பல்வேறு திட்டங்களை வகுத்து எதிர்காலங்களில் செயற்பட பிரயத்தனம் எடுத்துள்ளது.
பொதுக்கூட்டம்
இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பில் 150 அதிகமான பட்டதாரிகள் உட்பட கல்லூரியில் 02 வருடங்களுக்கு அதிகமான கல்வியாண்டினைப் பூர்த்தி செய்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஓவ்வொரு வருடமும் நடுப்பகுதியில் பழைய மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது, மேற்படி பொதுக்கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான புதிய நிர்வாக் தெறிவு, புதிய அங்கத்தவர்கள் உள்வாங்கள் மற்றும்; கல்லூரியின் அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள் முன்மொழிதல் உட்பட கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் நடைபெறுகின்றன.
இன்ஷா அல்லாஹ் அந்தவகையில் 2013 ஆம் ஆண்டிற்கான இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் அதிபர் உஸ்தாத் ரம்ஸி உவைஸ் (நளீமி) அவர்களின் தலைமையில் மாதம்பையில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் காலை 09 : 30 மணி முதல் மாலை 05 : 30 மணி வரை நடைபெற தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட பொதுக் கூட்டத்திற்கு விஷேட அதிதியாக கல்லுரியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்லூரியின் பணிப்பளர் மற்றும் கல்லூரியின் நிருவாகசபை உருப்பினர்கள் உட்பட இன்னும் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மேற்படி வருடாந்த பொதுக் கூட்டத்திறகு இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் கல்விகற்றவர்கள் கலந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். 0773573679, 0777874984, 0776614826.
Post a Comment