Header Ads



பொலிஸ் சேவையின் போது வபாத்தானவர்களுக்காக துஆ பிரார்த்தனை


(யு.எம்.இஸ்ஹாக்)

இலங்கை  பொலிஸ்  சேவையின் 147வது தினம் 03-09-2013  நாடு பூராகவும் உள்ள பொலிஸ்  நிலையங்களில் கொண்டாடப்பட்டது.

கல்முனை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப் பட்ட  இந்த  நிகழ்வில்  இலங்கை காவல் துறையில் இணைந்து பணியாற்றி  மரணித்த முஸ்லிம் போலிஸ் உதியோகதர்களுக்காக  கல்முனை நகர்  ஜும்மா பள்ளி வாசலில்  அசர் தொழுகையை தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனை நிகழ்த்தப் பட்டது .பள்ளிவாசல் பேஷ்  இமாம்  மௌலவி இக்பால்  அவர்களினால் இந்த துஆ பிரார்த்தனை நிகழ்த்தப் பட்டது. இதில் முஸ்லிம்  பொலிஸ் அதிகாரிகளும்  கல்முனை வர்த்தக  சமூகத்தினரும் கலந்து கொண்டனர் .

நேற்று  காலை  கல்முனை பொலிஸ்  தலைமை காரியாலய பதில் பொறுப்பதிகாரி வசந்த குமார தலைமையில்  இந்த  147வது  போலிஸ் தின விழா ஆரம்பித்து வைக்கப் பட்டது . அங்கு மரணித்தவர்களுக்கு மரியாதை செலுத்தப் பட்டதுடன்  சத்திய  உறுதி யுரையும்  பதில் பொறுப்பதிகாரியினால்  அங்கு நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்தே மாலை நகர் பள்ளிவாசலில் இந்த துஆ பிரார்த்தனை நிகழ்வு இடம் பெற்றது

No comments

Powered by Blogger.