மாளிகைக்காடு வீதி , கொங்கிறீட் வீதியாகிறது
காரைதீவு – மாளிகைக்காடு எல்லை வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டுவருகிறது. முறையாக முன்னரே வடிகான் அமைக்கப்பட்டு அதற்கு பூரணமாக வடிகான் மூடிகள் இடப்பட்டுள்ளன. வடிகான்கள் அமைக்கப்பட்ட பின்னரே தற்போது வீதி ஆழமாக்கப்பட்டு கொங்கிறீட் இடப்பட்டுவருகிறது.
அதனை வீதி அபிவிருத்தியில் நிபுணத்துவமுள்ள பொறியியலாளர் ஒருவர் மேற்பார்வை செய்துவருகிறார். ஆதலால் அது சிறப்பாக இடம்பெறுகிறது. பொதுமக்களின் கருத்துக்களும் அங்கு வரவேற்கப்பட்டு வீதி அமைக்கப்படுவது பலரையும் வியக்கவைத்துள்ளது.
Post a Comment