Header Ads



ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கவில்லை - நவநீதம்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர். அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையவில்லை. இதனை நீதி அமைச்சருடனான சந்திப்பின் போதும் வினவினேன். அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்கப்படவில்லை. ஆகவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உரிய நீதிதுறைசார் பொறிமுறையைக் கையாண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் யுத்தம் முடிந்து 4 வருட காலமாகியும் பயங்கரவாதச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல.

3 comments:

  1. அம்மணியிடம் பல்லைக் காட்டி சிரித்துப் பேசினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்று நமது சாணக்கிய தலைவர் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்....

    எல்லா நாட்களும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது என்பதை சீக்கிரம் சிலர் புரிந்துகொள்வர்....

    ReplyDelete
  2. அதுதானே அவர்ர style. நம்மட கேள்விக்கு பதில் சொன்னாரா இல்லையா எண்டு கேள்வி கேட்டவங்கள குழப்புரதுல கிங்கு............

    ReplyDelete
  3. சொல்லி கொடுத்ததை தானே சொல்ல முடியும்

    ReplyDelete

Powered by Blogger.