மாகாண சபை தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
ஜனநாயக நாட்டில் தேர்தல்களில் வாக்களிப்பது என்பது இஸ்லாம் தடை செய்யாத, அனுமதித்த ஜனநாயக ரீதியிலான நமது உரிமையை பாதுகாக்கும் ஒரு செயல்பாடாகும்.
அந்த வகையில் இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் விஷயத்தில் கண்டிப்பாக வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அன்பாய் வேண்டுகின்றோம்.
நாம் வாக்களிக்க இருக்கும் கட்சியை அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதில் மூன்று விஷயங்களை முஸ்லிம்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
1. நாம் வாக்களிக்கும் கட்சி அல்லது வேட்பாளர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
2. அதேபோல் நாம் வாக்களிக்கும் கட்சிக்கு, வேட்பாளருக்கு தாம் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
3. அது போல் நாம் வாக்களிக்கும் கட்சி, வேட்பாளர் தீமைகளை தடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
வாக்களிப்பதற்கு முன்பதாக நாம் வாக்களிக்கும் கட்சி, வேட்பாளர் இந்த நிலையில் இருக்கின்றாரா? என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். தேர்தல்களில் முஸ்லிம்கள் வாக்களிக்காமல் இருப்பது நமது உரிமைகளை நாமே விட்டுக் கொடுப்பதுமட்டுமன்றி ஓரளவுக்கேனும் சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களை நாமே இல்லாமலாக்குவாகிவிடும்.
ஆகவே தற்போதைய நாட்டு சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சிக்கு நமது வாக்குகளை அளிப்பதின் மூலம் முஸ்லிம் உம்மத்தின் எதிர்கால உரிமையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.
இவண்
ரஸ்மின் MISc
துணை செயலாளர்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
idu ungalukku konjam ovara theriyalla.already acju sollitanga sltj.nenga late.
ReplyDeleteneegal solwathu pola muslimkalukkaha kural kuduttha kural kudukinra ora talaiwan AZATH SALLEY mattum than muslimkalin urimaihal parikapadum pothu palli vayalhal udaiha padum pothu kural kudutha oru talaiwar azath salley
ReplyDelete