புல்மோட்டை காணி விடயத்தில் பொலிஸாரும் பொதுமக்களுக்குமிடையில் வாக்குவாதம்
புல்மோட்டைப் பிரதேசத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக இப்பகுதி முஸ்லீம்களால் பராமரிக்கப்பட்டும் ஆட்சி புரியப்பட்டும் வருகின்ற குடியிருப்பு மற்றும் விவசாய நிலப்பரப்புகளைச் சுவீகரித்து இப்பகுதியில் பெரும்பான்மையினரைக் குடியமர்த்தி இனப்பரமட்பலைச் சிதைவடையச் செய்யும் ஒரு முயற்சியின் ஓர் அங்கமாக பூஜா பூமி என்ற திட்டத்தின் கீழ் இப்பகுதியில் விசேடமாக ஐந்து பன்சலைகளை நிறுவி ஒவ்வொரு பன்சலைக்கும் தலா 500 ஏக்கர் என்ற அடிப்படையில் சுமார் 2500 ஏக்கர் புல்மோட்டை மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளை சுவீகரிக்கும் திட்டம் தற்போது புல்மோட்டையில் நடைபெற்று வருகின்றது.
இந்நடவடிக்கை இப்பகுதி பன்சலை ஒன்றின் மதகுருவால் அவரின் எண்ணத்திற்கு பெயர் குறிக்கப்பட்டு மாவட்ட செயலளாருக்கு அடையாளம் காட்டப்பட்ட இடங்களை அவசர அவசரமாக அளந்து சுவீகரிக்கும் முயற்சியே இங்கு நடைபெறுகின்றுது. இந்த அடிப்படையில் இன்று 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் ஓர் முயற்சியை மாவட்ட செயலாளரின் தொடர் முயற்சியுடனும் பிரதேச செயலாளரின் ஆசீர்வாதத்துடனும் நில அளவையாளர்கள் புல்மோட்டை 14ம் கட்டை பிரதேசத்தில் மீண்டும் பொலிஸாரின் பாதுகாப்புடன் பொது மக்களின் பரம்பரையாக பயிர் செய்யப்பட்டு வந்த காணிகளிற்குள்ளும், அனுமதிப்பத்திர மற்றும் உறுதிக்காணிகளுக்குள்ளும் இன்று இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து ஏன் காணிகள் அளவை செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு பூஜா பூமிக்காக இப்பிரதேச காணிகள் அளவிடப்படுகின்றன என்ற அரச நில அளவையாளரின் பதிலுக்கு பதற்றமடைந்த பொது மக்கள் எமது பூர்வீக நிலங்களை அளவையிடுவதனை நிறுத்துமாறு கோரி கோசங்களை எழுப்பியதுடன் சம்பவ இடத்திற்கு அரசியல் பிரமுககர்களையும், ஜம்மியத்துல் உலமாவினரையும் அழைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ,குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையினர் ஆகியோர் விஜயம் செய்து நில அளவையாளரை சந்தித்து பேசினர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நில அளவை மேற்கொள்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது அவ்வாறு தடை செய்தால் நாங்கள் உங்கள் அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்போம் எனக் கூறிய போது மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் உதவித் தவிசாளர் தௌபீக் ஆகியோர் பொலிஸாருடன் மக்களின் அவல நிலை குறித்து விபரித்த வேளை பொலிஸாருக்கும் இவர்களுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் மீண்டும் மக்களை அகற்ற முயற்சி செய்தனர் . இவை எதனையும் பொருட்படுத்தாது வெயிலிலும் மழையிலும் அனைவரும் சம்பவ இடத்தை விட்டு நகராமல் நின்றனர்.
அதன் பின்னர் நில அளவைகளை இடை நிறுத்தி விட்டு நில அளவையாளரகள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மாகாண சபை உறுப்பினர் அன்வர்; அவர்களும், உதவித்தவிசாளரும், ஆதமபாவா தௌபீக் பெரிய பள்ளிசாயலின் ;தலைவர் கலீல் லெப்பை மற்றும் ஜம்மியா உறுப்பினர் ஐயுப்கான் மௌலவியும் எங்களது கடமைகளுக்கு பங்கம் விளைவிக்கின்றனர் என்ற முறைப்பாட்டை பதிவு செய்து செய்துள்ளனர். மீண்டும் நாளை அறுவரை நீதி மன்றத்திற்கு ஆஜர் படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் காணி அளவிடும் நடவடிக்கை தொடரலாம் என மக்கள் பதற்றமாக உள்ளனர்.

Post a Comment