Header Ads



சட்ட ரீதியற்ற முறையில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பெறுபவர்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

(எம்.எம்.ஏ.ஸமட்)

சட்ட ரீதியற்ற முறையில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பெறுபவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தகர்களை அறிவிறுத்துகிறது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் என வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் வர்த்தகர்களிடமிருந்து சட்ட ரீதியற்ற முறையில் பணம் வசூலித்து வருவதாக அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இத்தகையவர்கள் தொடர்பில் நாட்டிலுள்ள வர்த்தகர்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுவதுடன் இவர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக 0771088922 அல்லது 0771088907 என்ற தொலைபேசி இலக்கங்ளுடாக தெரிப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தகர்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.