ஆசாத், மனித குலத்திற்கு எதிராக குற்றம் இழைத்துள்ளார் - பான் கீ மூன்
சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். இதில் பின்னடைவை சந்தித்துவரும் அதிபர் படையினர் டமாஸ்கஸ் அருகே கடந்த மாதம் விஷக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதில் 1429 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஐ.நா. ஆய்வாளர்கள் சிரியாவில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் ஐ.நா. அறிக்கை விரைவில் வெளிவரயிருக்கிறது. இந்நிலையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்பட எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
சிரியாவில் கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் மனித குலத்திற்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி குற்றம் இழைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிபர் ஆசாத் மறுத்ததையடுத்து இந்த முடிவை பான் கீ மூன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அடுத்த வாரம் என்ன மாறுதல்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடடே நீங்கள் இருக்குறீங்களா? எங்கடா ஆளக்கானாமே என்று பார்த்தேன், ஏதோ wi-fi ப்ராப்ளம் போல, நல்லவேள அசாத் எல்லாரையும் கொன்றது க் பிறகு வராம இப்பவாவது வந்ததுக்கு மிக்க நன்றி, சரி நீங்க என்ன செய்யபோரிங்க, ஒபாமட ஸ்டேட்மெண்ட்ட போட்டோ கோபியா மீள் ஒலிபரப்பு செய்யபோரிங்க..........அவ்வளவு தானே
ReplyDelete