Header Ads



போதைப் பொருள் வியாபாரிகளுக்கு உச்சமட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்


குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்காக மனித உயிர்களைப் பலிகொள்ளும் ஒரு காலத்திலே வாழ்கிறோம். போதைப் பொருட்கள் என்னென்ன ரகமாயினும் அவையெல்லாம் மனித உயிரையே காவுகொள்ள கூடியனவாகும். இதில் ஒரு வகையான ஹெரோயின் போதைப் பொருள் மிகவும் கொடியது என்பதனால்தான் பல உலக நாடுகள் ஹெரோயின் தொழிலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கபப்பட வேண்டுமெனக் கூறியுள்ளன. அத்தொழிலில் ஈடுபடும் சிலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிடுவதோடு மற்றவர்களின் சொத்துக்களையும் உயிரையுமே போக்கிவிடுகின்றனர். இதில் சிக்குண்டு தவிப்போர் ஏழைகளும் இளம்வயதினருமே ஆகும்.

கடந்த வாரம் பிடிக்கப்பட்ட 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோ ஹெரோயினை கொண்டுவந்தவரும் வரவழைத்தவரும் உடந்தையாக இருந்தோரும் மானிட சமூகத்தின் துரோகிகளேயாகும். சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் அவர்கள் செய்த குற்றம் சன்மார்க்கத்துக்கே இழுக்கை சேர்த்துவிடுகிறது. எனவே யார் இதில் சம்பந்தப்பட்டாலும் அவர்களுக்கான தண்டனை அதி உச்ச தண்டனையாக அமைய வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசைக் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலமே சீரானதொரு சமூகத்தையும் ஒழுக்க சீலம் மிக்கதொரு சந்ததியையும் கட்டியெழுப்ப முடியும். 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

3 comments:

  1. ithellam kedkire neengel konchem samooha urimeyeyum kelungel....

    ReplyDelete
  2. சொன்னாலும் சொல்லாட்டாலும் அவங்க வழங்குவாங்க வழங்குவாங்க.

    ReplyDelete
  3. முஸ்லிம்களை பயங்கரவாதிகளா சித்தரித்தும் செய்திகள் வெளியாகியும் உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளம் கோதா சொல்லியிருக்கின்றார். இச்செய்திக்கு உங்கள் பதில் என்ன வென்பதை பார்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.