Header Ads



ஐக்கிய நாடுகள் சபையில் ஒபாமாவுடன் உரையாற்ற மகிந்தவுக்கு நேரம் ஒதுக்கீடு

ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் மகிந்த ராஜபக்ச முதலாவது நாள் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்ரெம்பர் 24ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 4ம் நாள் வரை நடைபெறவுள்ளது.

பொதுச்சபைக் கூட்டத்தின் பொதுவிவாதத்தின் முதலாவது நாள் அமர்வில், முதலாவதாக பிறேசில் அதிபரும், அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உரையாற்றவுள்ளனர்.

இந்த அமர்வில் மகிந்த ராஜபக்சவும் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 27ம் நாள் உரையாற்றவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வரும் 28ம் நாளே உரையாற்றுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் நாள் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் மன்மோகன்சிங் சந்திக்கவுள்ளதால், அவரது ஐ.நா பொதுச்சபை உரை பிற்போடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு உரையாற்ற செப்ரெம்பர் 24ம் நாள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அதில் பங்கேற்பாரா என்பதை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

No comments

Powered by Blogger.